search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm palanisamy"

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    இரவு 7 மணிக்கு நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
    ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    சென்னை:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். இவரது வெற்றியை கொண்டாடும் வகையில், கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



    இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கோமதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்று சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
    சென்னை:

    தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றனர் எனக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

    மேலும், அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்கின்றனர்.  இதற்கு தீர்வு காண வேண்டுமென மீனவ அமைப்புகள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 46 மீனவர்கள் மற்றும் 26 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை மூலம் உடனடியாக பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டும். மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
    ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy
    சென்னை:

    கன்னியாகுமரியை சேர்ந்த 3 மீனவர்கள் ஜனவரி மாதம் 7-ஆம் தேதி ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈரான் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy
    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #UdumalaiRadhakrishnan
    சென்னை:

    சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார்.

    இதையடுத்து, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



    அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட பலர் சந்தித்து நலம் விசாரித்தனர். #UdumalaiRadhakrishnan
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.



    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் உரிமைகளை சில நேரம் விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும்.

    சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். பல மாநிலங்களில் ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாத நிலையில், நிலுவையை  தமிழகம் வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.  #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    சென்னை:

    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.



    இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும், சலுகையும் வழங்க முடியும்.

    எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. நிலைமையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இரு சக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி தி.மு.க.வினர் நாட்டியம் ஆடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #TNCM
    சென்னை:

    பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும்  நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
     
    இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.



    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

    மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mekadatu #PMModi #TNCM
    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    சென்னை:

    2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

    இருநாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.

    முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.

    அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே.

    முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். #GIM2019 #DMK #MKStalin
    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என புகழாரம் சூட்டியுள்ளார். #GIM2019 #VenkaiahNaidu
    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு பேசியதாவது:

    மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.

    தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.



    தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும். 

    தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் தத்துவம் ஆகும்.

    மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என கூறினார். #GIM2019 #VenkaiahNaidu
    ×