என் மலர்
செய்திகள்

அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
சென்னை:
மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
Next Story






