என் மலர்

  செய்திகள்

  மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
  X

  மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #TNCM
  சென்னை:

  பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும்  நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
   
  இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

  ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால் மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

  இதற்கிடையே, மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.  இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.

  மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Mekadatu #PMModi #TNCM
  Next Story
  ×