என் மலர்
செய்திகள்

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
சென்னை:
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். இவரது வெற்றியை கொண்டாடும் வகையில், கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கோமதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்று சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
Next Story






