search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "secretariat"

  • அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

  சென்னை:

  தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது.

  சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்க செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

  அதுமட்டுமின்றி சட்ட மன்றத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் திருமண மண்டபங்கள், ஸ்டேடியங்களில் மது அருந்த அனுமதித்து முதலில் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு அதில் மாற்றம் கொண்டு வந்து வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாற சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும் திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

  இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கான கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இது தவிர தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கான ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

  இதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் என்னென்ன என்பதை கூட்டம் முடிந்ததும் அதிகார பூர்வமாக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #UdumalaiRadhakrishnan
  சென்னை:

  சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார்.

  இதையடுத்து, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட பலர் சந்தித்து நலம் விசாரித்தனர். #UdumalaiRadhakrishnan
  சென்னை தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் கூறியதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார். #OPSYagam #MKStalin
  மதுரை:

  தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யாகம் நடத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

  தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?


  யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

  அம்மா அறிவித்த மக்கள் நல திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். எனவே, மக்கள் முழுமையாக 100-க்கு 100 எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். எந்த தேர்தல் வந்தாலும், மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளிப்பார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #OPSYagam #MKStalin

  தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தனி அறை ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க் கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமைச் செயலகத்தின் 4-வது பிரதான நுழைவு வாயிலின் அருகே ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

  ஆனால் அந்த இடம் போதவில்லை என்றும், கூடுதல் இடம் வேண்டும் என்றும் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையை மு.க.ஸ்டாலினுக்காக ஒதுக்க சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அறை மு.க.ஸ்டாலின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும். எனவே மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே உள்ள அறையை பயன்படுத்துவார்கள். 
  ×