என் மலர்
செய்திகள்

ஊட்டியில் செயல்படும் உருளைக்கிழங்கு மையத்தை மூடக்கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
ஊட்டியில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
சென்னை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
உதகையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

1957-ல் தொடங்கப்பட்ட இந்த மையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
தென்மாநில விவசாயிகள் பஞ்சாப்பில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. எனவே, ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
Next Story