search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள்"

    • மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச்சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாண விகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒருவருக்கு  ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail,com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது விண் ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
    • இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வாடிப்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மேலும் வருகிற 28-ந்தேதி ஆண்டிப்பட்டி பங்களா அருகே நடைபெறும் கண்காட்சியை பார்ப்பதற்கு மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.

    இதேபோன்று வலையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    • பள்ளி நிறுவனர் ஓ.வி.அழகேசன் பிறந்தநாள், 55-வது ஆண்டு விழா ஆகியவை நடந்தது
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

    அருவங்காடு,

    குன்னூர் அருகே பிருந்தாவன் பள்ளி நிறுவனர் ஓ.வி.அழகேசன் பிறந்தநாள், 55-வது ஆண்டு விழா ஆகியவை நடந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பள்ளி தலைவர் வாமனன், துணைத்தலைவர் மயூர்வாமனன் மற்றும் சசிகலா வாமனன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அஸ்மா ஆண்டறிக்கை வாசித்தார். அறிவியல்அறிஞர் டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு பேசினார்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மாணவிகள் பூக்கூடையுடன் ஜப்பானிய நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

    • தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

    • உசிலம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக உலக தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன், நிலைய மருத்துவர் டாக்டர் மாதவன், மாவட்ட மனநல மருத்துவர் சந்தோஷ்ராஜ், மனநல உளவியலாளர் அப்துல், சமூகப்பணியாளர் சோனியா, ஜெகன், செவிலியர் பிரசாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    • 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,

    மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.

    • விருதுநகரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்ப டையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 36 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தே கங்களை அகற்றி, வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    • நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • நாச்சியாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை தொடங்கியது.
    • ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசினா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை (எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்) முது அறிவியல் (எம்.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல், புள்ளியியல் முதுவணிகவியல் எம்.காம். வணிகவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக் கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

    இப்பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    அரசு இட ஒதுக்கீடு மற்றும் மாணவா்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.

    விளையாட்டு வீரா்கள் ஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்கள் தகுந்த சான்றிதழ்களுடன் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநரைச் சந்திக்கவும்.

    விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் அவா்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு கலந்தாய்வு அழைப்பு - கட்டண விவரத்துடன் குறுஞ்செ ய்தியாக அனுப்பப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் ஜான் பீட்டா் தெரிவித்துள்ளாா்.

    • 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற் குட்பட்ட வடக்கு வீதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திருவாரூர், கேக்கரை, சேர்ந்தமங்கலம், கொடிக்கால் பாளையம், விளமல், வாள வாய்க்கால், புலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    மேலும் இந்தப் பள்ளியில் பெற்றோர்கள் இல்லாத ஆதரவற்ற மாணவிகள் தங்கி படிக்க கூடிய விடுதியும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் இந்த விடுதியில் தங்கி படிக்கும் வேலங்குடி மற்றும் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் இருவர் பள்ளி முடிந்து விடுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றில் மாணவிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும்அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்
    • வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தும் புதுமைப்பெண் திட்டமானது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 152 கல்வி நிறுவனங்களிலிருந்து 3349 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளமானது www.puthumaipenn.tn.gov.in செப்டம்பர் 4-ந்தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் தாங்கள் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே விண்ணப் பக்க வேண்டும். கன்னியா குமரி மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிறுவ னங்களில் மேல்படிப்பு, தொழிற்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×