என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "P.G Consultation"
- நாச்சியாா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை தொடங்கியது.
- ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசினா் மகளிா் தன்னாட்சி கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை (எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்) முது அறிவியல் (எம்.எஸ்ஸி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், புவியியல், புள்ளியியல் முதுவணிகவியல் எம்.காம். வணிகவியல் ஆகிய பாட பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கைக் கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
இப்பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
அரசு இட ஒதுக்கீடு மற்றும் மாணவா்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்குமான காலியிடங்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கப்படுவா்.
விளையாட்டு வீரா்கள் ஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்கள் தகுந்த சான்றிதழ்களுடன் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநரைச் சந்திக்கவும்.
விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் அவா்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு கலந்தாய்வு அழைப்பு - கட்டண விவரத்துடன் குறுஞ்செ ய்தியாக அனுப்பப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வா் ஜான் பீட்டா் தெரிவித்துள்ளாா்.