மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கல்

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.
மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கல்
Published on: 

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வாடிப்பட்டி அ.தி.மு.க. நகர் செயலாளர், பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமார் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். மேலும் வருகிற 28-ந்தேதி ஆண்டிப்பட்டி பங்களா அருகே நடைபெறும் கண்காட்சியை பார்ப்பதற்கு மாணவிகளுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கினார்.

இதேபோன்று வலையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com