வட்டார விளையாட்டு போட்டிகள்

நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வட்டார விளையாட்டு போட்டிகள்
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com