search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை"

    • 1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
    • இதில் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

    இந்தக் கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 1987-90-ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து 1000 பனை விதைகள் விதைப்பு செய்யும் பணி நடைபெற்றது.

    கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து பனை விதையை விதைத்து தொடக்கி வைத்தார்.

    கல்லூரி முதல்வர் குமார், முன்னாள் முதல்வர் தங்கமணி, துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாணவர் ராமகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடேசன், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், கணினி துறை தலைவர் விஜயலட்சுமி, மின்னியல் துறை தலைவர் கீதா மற்றும் அனைத்து துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 1000 பனை விதைகளை விதைக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.

    • பனை விதைகள் சேகரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
    • இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள 38 ஊராட்சிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை பாலம் தொண்டு நிறுவனம் முன்னெடுப்பில் டெல்டா பனை மர பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தை கடந்த வாரம் மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதுவரை 22 ஆயிரத்து 640 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இப்பணியில் சமூக ஆர்வலர்கள், சேவை அமைப்புகள் ஈடுபட்டு வருகிறனர்.

    தொடர்ந்து பனைவிதை சேகரிப்பும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது.இதில் பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தனியாக சென்று இதுவரை 6 ஆயிரத்து 236 விதைகள் சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது.
    • மழைக்காலங்களுக்கு முன்னதாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்திற்காக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தை சார்ந்த ஆதிரெங்கம், கொருக்கை, கொக்காலடி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களால் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு திருத்து றைப்பூண்டி தாசில்தார் கலை.காரல் மார்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவ்வாறு சேகரிக்க ப்பட்ட பனை விதைகளில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விதைகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பனை விதைகளை நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பனிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு ஒன்றரை அடி உயரம் வளர்ந்துள்ளது.

    வருகின்ற மழைக்காலங்களுக்கு முன்ன தாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும் என்றார்.

    தரமான பனை விதைகளை சேகரித்து இயற்கையை நேசிக்கின்ற ஊராட்சி தலைவர்களான ஆதிரெங்கம் வீரா (எ) வீரசேகரன், கொறுக்கை ஜானகிராமன், கொக்காலடி வசந்தன் ஆகியோர்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெகுவாய் பாராட்டினார்.

    நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர்கள் முரளிதரன், சிவக்குமார், கொருக்கை கிராம உதவியாளர் ராஜ முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு முழுவதும் 10 கோடி பனை விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பனை மரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு இலட்சம் பனை விதை நடும்பணி தொடக்கவிழா நடைப்பெற்றது.

    நகர்மன்ற நியமன குழு உறுப்பினர்பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில், மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையேற்று பனைவிதை நடும்பணியை தொடங்கிவைத்தார்.

    ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்முசிறி விதையோகநாதன் கூறும்போது, திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் நவம்பர் மாதம் வரை இப்பணி நடைப்பெறும், மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பத்து கோடி விதை நடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பனையின் பயன் குறித்து இயற்கை வேளாண் பயிற்றுனர் பாலம் செந்தில்குமார் பேசும் போது, பனை தமிழ் நாட்டின் மரம். அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால் கற்பகதரு என்றழைக்கப்படுகிறது,.எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து உயிர்வாழக்கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை பூமிக்குள் சேமிக்ககூடியது. மண் அரிப்பை தடுக்கும், ஒரு பனைமரம் ஆண்டிற்கு 180 லிட்டர் பதனீர், 25 கிலோ பனைவெல்லம்,16 கிலோ பனஞ்சீனி, 11 கிலோ தும்பு, 3 கிலோ ஈக்கி, 10 கிலோவிறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் , 100 கிலோ பனங்கிழங்கு என இதன் பயன் அளவிடமுடியாது. இப்படி பல்வேறு நன்மைகளை தரும் பனைமரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்கவும், மீண்டும் இதை அதிகளவு நட்டு வளர்த்து நமது சந்ததிகளுக்கு வளமான பூமியைவிட்டு செல்வோம் என இந்நாளில் உறுதியேற்போம் என்றார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் ,

    பாரத மாதா நிறுவனர் எடையூர் மணிமாறன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், ரோட்டரிகாளிதாஸ், ரோட்டரி சங்க தலைவர் மாணிக்கம், அரிமா சங்க தலைவர் சின்னதுரை, நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்தி, தோட்டகலை, நீர் வள ஆதார துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி செந்தில்குமார், வசந்த், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணம் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். 

    • மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும்.
    • ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் படி, பனை விதைகள் சேகரிப்பு பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து பாலம் செந்தில்குமார், முசிறி விதையோகநாதன் ஆகியோர் கூறுகையில்:-

    அனைத்து அரசுத்துறைகள், சேவை அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே நடப்படும் என்றார்.

    • 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,

    மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.

    • மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
    • பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

    வாழப்பாடி:

    வறண்ட நிலங்களிலும் வறட்சியை தாங்கி வளர்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் 'பனை' முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.

    நமது மாநில மரமாக போற்றப்படும் பனை மரத்தின் ஓலைகள் குடிசை கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை பதப்படுத்தி சித்த மருந்துகளில் சேர்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற் கண்டு தயாரிக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனை மரத்துப்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பேளூர் பகுதிகளில் மானாவரி, தரிசு நிலங்கள் மற்றும் ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் பனைமரங்கள் நிறைந்திருந்த பெரும்பாலான பனந்தோப்புகள் அழிந்து விட்டன.

    நீர்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசு நிலங்களிலும், விளை நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், செங்கல் சூளைகளுக்கும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டன. வறட்சியை தாங்கி வளர்ந்து நீண்டகாலத்திற்கு பலன் தரும் பனை மரங்களை வளர்க்க தற்கால சந்ததியிடையே ஆர்வம் இல்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம் கிராமத்தில் விலாரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் இவரது கணவர் மணி ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, உதிர்ந்து விழுந்து கிடந்த ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.

    இந்த விதைகளை கிராமத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களிலும் விதைத்து வருகின்றனர்.அசுர வேகத்தில் குறைந்து வரும் நீண்டகால பலன்தரும் பனை மரங்களை வளர்க்கவும், மற்ற கிராம மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், பனை விதைகளை சேகரித்து விதைத்து முன்னுதாரணமான விலாரிபாளையம் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • நந்தவனம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விக்கி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பனைவிதைப்பு பணியை துவக்கி வைத்தனர்.
    • ஊராட்சி செயலளார், மக்கள் நலப்பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றிம் நெற்குன்றம் ஊராட்சியில் தூய்மை இந்தியாவின், இருவார தூய்மை அனுசரிப்பு மற்றும் பசுமை மையமாக்கல் திட்டத்தின் கீழ் பனைவிதை விதைக்கும் பணி மற்றும் பனைபொருள் உற்பத்தி பனை கைவினை பொருட்கள் பயிற்சி குறித்த விழிப்புணர்வு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையிலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ஜி. யோகன்குமார் மற்றும் துணை பொது மேலாளர் கே.வி.வி.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி மற்றும் நந்தவனம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி விக்கி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் பனைவிதைப்பு பணியை துவக்கி வைத்தனர்.

    முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஊராட்சியில் விதைப்பு பணியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பனை விதைப்பு பணியை மேற்கொள்ளும் விதம் மற்றும் பனை சார்ந்த கைத்தொழில்கள் பயிற்சி குறித்தும், பனையினுடைய மதிப்பு கூட்டு பொருட்களின் உற்பத்தி, அதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் வருங்காலங்களில் பெறக்கூடிய வருவாய் வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும், இந்நிகழ்சியில், நெற்குன்றம் ஊராட்சியின் வார்டு உறுபினர்கள், ஊராட்சி செயலளார், மக்கள் நலப்பணியாளர் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்திகாபானு நன்றி கூறினார்.

    • தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது.
    • தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் சாலையோரம், கோயில் வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், பனை விதைகளைச் சேகரித்து, பனை விதைகள் விதைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தமிழா்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த பணியை துணைவேந்தா் திருவள்ளு வன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது. இதில் பல வகையான மரங்கள் இருந்தாலும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    இதை அதிகப்படுத்துவதற்காக 10,000 பனை விதைகளை விதைக்கிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பனை விதைகள் மண்ணில் புதைந்து வளருவதற்கு வாய்ப்பாக அமையும்.

    தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வில் கிரீன் நீடா சுற்றுச்சூழல்இயக்கத் தலைமை ஒருங்கிணை ப்பாளா் ராஜவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜானகிராமன், சிலம்பரசன், பசுமை எட்வின், சண்முகவடிவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் முகமது ரபீக், பசுமை இயக்க ஆா்வலா்கள் தஞ்சாவூா் முரளி, நீடாமங்கலம் உஷா, ஆடிட்டா் சக்தி பெருமாள், தமிழ்ப்பல்கலைக்கழகச் சுவடிப் புல முதன்மையா் கண்ணன், ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இந்து, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×