search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடும் பணிக்காக பனை விதைகள் வழங்கிய கலெக்டர் சாருஸ்ரீ
    X

    நடும் பணிக்காக பனை விதைகள் வழங்கப்பட்டது.

    நடும் பணிக்காக பனை விதைகள் வழங்கிய கலெக்டர் சாருஸ்ரீ

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது.
    • மழைக்காலங்களுக்கு முன்னதாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்திற்காக திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தை சார்ந்த ஆதிரெங்கம், கொருக்கை, கொக்காலடி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களால் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு திருத்து றைப்பூண்டி தாசில்தார் கலை.காரல் மார்க்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவ்வாறு சேகரிக்க ப்பட்ட பனை விதைகளில் முதற்கட்டமாக 20 ஆயிரம் விதைகளை திருத்துறைப்பூண்டி தாசில்தார், மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் பனை விதைகளை நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பனிடம் வழங்கினார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடி ஊராட்சியில் 25 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு ஒன்றரை அடி உயரம் வளர்ந்துள்ளது.

    வருகின்ற மழைக்காலங்களுக்கு முன்ன தாக அனைத்து விதைகளும் நடவு செய்யப்படும் என்றார்.

    தரமான பனை விதைகளை சேகரித்து இயற்கையை நேசிக்கின்ற ஊராட்சி தலைவர்களான ஆதிரெங்கம் வீரா (எ) வீரசேகரன், கொறுக்கை ஜானகிராமன், கொக்காலடி வசந்தன் ஆகியோர்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெகுவாய் பாராட்டினார்.

    நிகழ்ச்சியின் போது வருவாய் ஆய்வாளர்கள் முரளிதரன், சிவக்குமார், கொருக்கை கிராம உதவியாளர் ராஜ முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×