search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணவாளக்குறிச்சி"

    • 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.
    • கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

    உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே பழவிளை பூவன்குடி யிருப்பை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மகன் மகேஸ்வரன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் தர்மபுரத்தை சேர்ந்த ராஜன் (42). இவர் மகேஸ்வரனுடன் சேர்ந்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இருவரும் கருங்கல் பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மகேஸ்வரன் ஓட்டினார். ராஜன் பின்னால் இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் மணவாளக்குறிச்சி கடந்து வெள்ளமோடியில் செல்லும்போது எதிரே கோணத்தில் இருந்து முட்டம் நோக்கி சென்ற பைக் மகேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்ப்பாராமல் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மகேஸ்வரன் சுசீந்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், எதிரே வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டுடன் காடு வடக்கு தெருவை சேர்ந்த ரவினோ பாலவி (24) நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மண வாளக்குறிச்சி போலீசார் ரவினோ பாலவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
    • அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்ததையடுத்து மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க தொழி லாளி ஒருவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் சென்றார். பின்னால் அவரது நண்பர் இருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் கருமன்கூடல் சானலில் மெயின் ரோட்டில் செல்லும் போது மண்டைக்காட்டி லிருந்து லட்சுமிபுரம் நோக்கி வேகமாக 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் கருமன்கூடல் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றது. மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்திய தொழிலாளி வேகமாக வந்த வாலிபர்களை 'பார்த்து போகக்கூடாதா?' என கண்டித்து சென்றார்.

    இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தொழிலாளி யின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று லட்சுமிபுரம் கல்லூரி அருகில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பி னர்களும் கடும் வாக்கு வாதம் செய்தனர். கை கலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதட்ட மடைந்த அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மண்டைக் காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசை கண்டதும் கும்பலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணா மல் உருட்டிக் கொண்டே போனார். மீதி நின்ற வாலிபர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வாலி பர்கள் திங்கள் நகர் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும், மண்டைக் காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் திங்கள்நகர் பகுதிக்கு செல்லும்போது தொழிலாளியிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.

    • கடன் சோகத்தில் விபரீத முடிவை தந்தை எடுத்து விட்டார்
    • மகன்கள் உருக்கம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன் பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (வயது 63). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி பிரேம லதா (58). இவர்களது மகன்கள் ஆதவன் (32), மாலன் (28) ஆகியோர் சென்னையில் ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில்ஆதவன் சென்னையிலிருந்து தந்தைக்கு போன் செய்து உள்ளார்.ஆனால் ஆறுமுக நயினார் போனை எடுக்க வில்லை. எனவே மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினருக்கு ஆதவன் தகவல் கூறியுள்ளார்.

    அவர்கள் விரைந்து சென்று பார்க்கும்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆறுமுகபெருமாள் சோபாவிலும், பிரேமலதா தரையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தி ருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடன் விவகாரத்தால் கணவன்-மனைவி இருவரும் பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகபெருமாளின் மகன் ஆதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரிய வந்தது.

    கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதனை அடைக்க தனது தந்தையிடம் அவர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறுமுக பெருமாள் குடும்ப சொத்தை விற்று பணம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் பத்திரப் பதிவு நடக்கவில்லை என கூறப்ப டுகிறது.

    சரியான நேரத்தில் மகனுக்கு உதவ முடிய வில்லை என ஆறுமுக பெருமாள் கடந்த சில நாட்களாக மன வேதனை யில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் தான் அவர் தற்கொலை முடிவை மனைவியுடன் சேர்ந்து எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    பெற்றோர் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவர்களது மகன்கள் சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடன் விவகாரத்திற்காக இப்படி விபரீத முடிவை எடுத்து விட்டீர்களே என தந்தை உடலை பார்த்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    • 3 பேர் மீது வழக்கு
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த கல்படி சடையன் விளையை சேர்ந்தவர் ஜோதிநாத் (வயது 41), தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள படிப்பகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகி யோர் வந்தனர்.

    அவர்கள் படிப்பகம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜோதிநாத், இங்கு வைத்து ஏன் மது அருந்து கிறீர்கள் என கண்டித்தார்.

    இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஜோதிநாத்தை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்யப் பட்டது.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரின்ஸ், லிவிங்ஸ்டன், சிவா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு
    • முன்விரோதத்தால் தாக்குதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடை சேர்ந்தவர் ராஜன், தொழிலாளி.

    இவரது மகள் சிவகலாவை இளையான் விளையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 38) திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இதன் காரணமாக சிவ கலா, கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் ராஜன் மீது ஸ்டீபன் ஆத்திரம் அடைந்தார்.இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் ராஜன் வீட்டுக்கு வந்த ஸ்டீபன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து ராஜனை தாக்கி உள்ளார். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்ததாக போலீசில் ராஜன் புகார் செய்தார்.

    அதன் பேரில் மணவா ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்த னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் தாமஸ் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ், மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சாமின் (வயது 29). இவர்களுக்கு 7 மற்றும் 3½ வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ராஜேஸ் மணவாளக்குறிச்சியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் படுத்து தூங்கினார். கண் விழித்து பார்த்தபோது மனைவி சகாய சாமின் மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை. உடனே அவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி யும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராஜேஸ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.

    • மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது.
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவதாஸ் (வயது 52).

    இவர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் எலக்ட்ரீசி யனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேசவதாஸ் அம்மாண்டி விளையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகில் செல்லும் போது அங்கு வந்த வேன் மோதியது. இதில் கேசவதாஸ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணவாள க்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாலஜெகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
    • டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி புவியியலாளர் ஸ்ரீ குமார், டிரைவர் பிரைட் ரிச்சர்ட் ஆகியோர் மணவாளக்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும்போது அங்கு எம் சாண்ட் மணல் கொண்டு சென்ற ஒரு டெம்போவை நிறுத்தினர்.

    உடனே டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் டெம்போவை சோதனை செய்ததில் அதில் 1 டன் எம் சாண்ட் மணல் இருந்தது.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. திருட்டுத்தனமாக எம் சாண்ட் மணல் கொண்டு செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இது பற்றி புவியியலாளர் சுரேஷ்கு மார் மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போவுடன் எம் சாண்ட் மணலையும் கை ப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி காந்தாரிவிளையை சேர்ந்தவர் மாகீன் (வயது 60). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கும் உடைய இவர் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். கட்டிலில் படுத்த அவர் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாகீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி பதர்நிஷா (55) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

    கடந்த 7-ந்தேதி இவர் வழக்கம்போல் கல்லூ ரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டினர் உறவினர் மற்றும் நண்பர் கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவி குடும் பத்தினர் துப்பு துலக்கியதில், அவர் தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (24) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது.

    உடனே மாணவி குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் கேட்டபோது, அவர்கள் மாணவி அங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அருண், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் 6 பேர் மீது வழக்கு
    • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி பீச் ரோடை சேர்ந்தவர் பீர் காஜ முகைதீன்.இவரது மனைவி முபீனா (வயது 34).இருவரும் உகண்டாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-ம் அலையில் பீர் காஜ முகைதீன் இறந்து விட்டார். இதற்கு பிறகு முபீனா உகண்டா சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு ஊர் திரும்பி கணவர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் வீட்டில் முபீனா வசிப்பது தொடர்பாக முபீனாவுக்கும் மாமியார் மெகர்பான் பீவிக்குமிடையே தகராறு இருந்து வருவதாக கூறப்ப டுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவ ருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கை கலப்பு ஏற்பட்டது.அவர்கள் இரு தரப்பினராக மோதி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முபீனா, மெகர்பான் பீவி இருவரும் படுகாயமடைந்தனர்.

    இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து இருவ ரும் தனித்தனியாக மணவா ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×