மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் படுகாயம்

மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் அருகே பழவிளை பூவன்குடி யிருப்பை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மகன் மகேஸ்வரன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் தர்மபுரத்தை சேர்ந்த ராஜன் (42). இவர் மகேஸ்வரனுடன் சேர்ந்து கட்டிட தொழில் செய்து வருகிறார்.

நேற்று இருவரும் கருங்கல் பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மகேஸ்வரன் ஓட்டினார். ராஜன் பின்னால் இருந்தார்.

மோட்டார் சைக்கிள் மணவாளக்குறிச்சி கடந்து வெள்ளமோடியில் செல்லும்போது எதிரே கோணத்தில் இருந்து முட்டம் நோக்கி சென்ற பைக் மகேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்ப்பாராமல் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மகேஸ்வரன் சுசீந்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜன் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், எதிரே வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டுடன் காடு வடக்கு தெருவை சேர்ந்த ரவினோ பாலவி (24) நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மண வாளக்குறிச்சி போலீசார் ரவினோ பாலவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com