search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழி"

    • 500 கிலோ அரிசி பறிமுதல்
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமை யிலான குழுவினர் வெள்ளமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தெரிசனம் கோப்பு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.

    காரை சோதனை செய்த போது காரில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரில் இருந்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தேரேக்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் என்பது தெரியவந்தது.போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்சாரிடம் விசாரணை நடத்திய போது ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கோணம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்
    • காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரிலிருந்து அசாம் மாநிலத்தின் திப்ருக ருக்கு இயக்கப்படும் ரெயில் இந்தியாவிலேயே அதிக தூரம் இயக்கப்படும் ரெயில் ஆகும். இந்த ரெயில் 4273 கி.மீ தூரம் பயணம் செய்கிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்தின் கேரளா வழியாக இந்த ரெயில் இயக்கப்படுவதால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    வாரத்துக்கு 2 நாள் இயங்கி வந்த இந்த ரெயில் இனி 4 நாள் ரெயிலாக வருகிற மே மாதம் முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் இந்த ரெயில் கன்னியாகுமரி வந்து விட்டு காலி பெட்டிகள் நாகர்கோவில் ரெயில் நிலை யம் கொண்டு வரப்பட்டு பராமரிப்பு செய்யப்படும்.

    பகல் நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி புதிய ரெயில்கள் இயக்க முடியாமல் போகும்.

    மேலும் 2 ஆயிரம் கி.மீ க்கு மேல் இயங்க கூடிய ரெயில்களான கன்னியா குமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹவுரா ரெயில் போன்றவற்றை தினசரி ரெயிலாக இயக்கு தல் போன்ற கோரிக்கை களை நிறை வேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தின் இட நெருக்க டியை சமாளிப்பதற்காக நெல்லை, குமரி ரெயில் நிலை யங்கள் கேரளாவுக்கு ஒடும் ரெயில்களை சுத்தம் செய்யும் நிலையங் களாக மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என்பது வேதனை யானது.

    நாகர்கோவில்-திருவ னந்தபுரம் வழித்தடத்தில் அளவுக்கு அதிகமாக ரெயில்கள் இயக்குவதால் டிராக் நெருக்கடி மற்றும் பயணிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் பிரச்சினை உள்ளது.

    இந்த நிலையை மாற்ற கன்னியாகுமரி- திப்ரூகர் ரெயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ஓர் தினசரி ரெயில் சேவை கூடுதலாக கிடைக்கும்.

    அது மட்டுமல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லவும் வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல வும் நேரடி ரெயில் சேவை கிடைக்கும்.

    கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் தினசரி ரெயிலாக மாற்றப்பட்ட காரணத்தால் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாரணாசிக்கு அறிவிக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க முடியாத நிலை உள்ளது. தற்போது வாராந்திர ரெயில் தான் இயக்கப்பட உள்ளது.

    இது போன்று குமரி மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ள பல்வேறு ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.

    இந்த விஷயத்தில் கன்னியாகுமரி எம்.பி., உடன டியாக தலையீட்டு மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து, கன்னியாகுமரி –-திப்ரூகர் ரெயிலை வழித்தடம் மாற்றம் செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாலிபர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
    • அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்ததையடுத்து மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க தொழி லாளி ஒருவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் சென்றார். பின்னால் அவரது நண்பர் இருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் கருமன்கூடல் சானலில் மெயின் ரோட்டில் செல்லும் போது மண்டைக்காட்டி லிருந்து லட்சுமிபுரம் நோக்கி வேகமாக 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் கருமன்கூடல் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றது. மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்திய தொழிலாளி வேகமாக வந்த வாலிபர்களை 'பார்த்து போகக்கூடாதா?' என கண்டித்து சென்றார்.

    இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தொழிலாளி யின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று லட்சுமிபுரம் கல்லூரி அருகில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பி னர்களும் கடும் வாக்கு வாதம் செய்தனர். கை கலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதட்ட மடைந்த அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மண்டைக் காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசை கண்டதும் கும்பலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணா மல் உருட்டிக் கொண்டே போனார். மீதி நின்ற வாலிபர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வாலி பர்கள் திங்கள் நகர் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும், மண்டைக் காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் திங்கள்நகர் பகுதிக்கு செல்லும்போது தொழிலாளியிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.

    • கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக வட மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை புறக்கணி க்கப்பட்டு விடப்படும் புதிய ரெயில்கள், வழக்கம் போல் கேரளாவை மையப்ப டுத்தியே அறிவிக்கப்ப டுகின்றன. இதற்கான காரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் மாநி லத்திற் குட்பட்ட பகுதிகள் வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் பொது மேலாளர், ரெயில்கள் இயக்கம் அதிகாரி, முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு என முக்கிய பொறுப்புகளில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் வட மாநில ரெயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.

    தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை யிடமாக கொண்ட வட கிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பாக திப்ருகர்-கன்னியாகுமரி அறிவிக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயிலும் கேரளா வழியாகத் தான் செல்கிறது.

    இந்த ரெயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கை. இந்த ரெயிலுக்கு 2-ம் கட்ட பிட்லைன் பராமரிப்பு, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது.இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதமாக புதிய ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து தற்போது வாராந்திர ரெயில்களாக இயக்கப்படும் திருக்குறள், ஹவுரா, மும்பை போன்ற ரெயில்களை தினசரி ரெயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.

    நாகர் கோவில்-ஷாலிமார் ரெயிலும் கேரள பயணிகள் வசதிக்காக தான் இயக்கப் படுகிறது. இந்த நிலையை மாற்ற, இந்த ரெயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால், அந்த ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

    இந்த வழியில் புதிய ரெயில்களை இயக்கா விட்டாலும் பரவாயில்லை. கேரள பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்று ரெயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருந்தால் போதும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

    மேலும் இது போன்ற ரெயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால், நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியில் இருந்து பால ராமபுரம் வரை யிலும் நாகர்கோவில்-திருநெல்வேலி வரையிலும் உள்ள இருப்புப் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.

    • அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.
    • இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள உத்திரை கிராமத்தில் இன்று நூறு நாள்வேலைக்கு ஏராளமான பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செல்லும் வழியில் தென்னை மரத்தில் இருந்த கதண்டு திடீரென பறந்து வந்து திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா, ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி ,நடேசன் மனைவி நவநீதம் ஆகிய 3 பேரையும் கதண்டு சுற்றி சுற்றி கடித்ததில் தலை மற்றும் கை கண்களில் காயம் ஏற்பட்டது.

    அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.

    அங்குஅவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தக்கலை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் வருவாய் ஆய்வாளர் சாமினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தக்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

    ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.சினிமா படப்பாடியில் சேசிங் சம்பவம் நடந்தது.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விளவங்கோடு ஞாரான்விளை பகுதியில் வைத்து காரை மடக்கினார்.அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சினிமா படம் பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது.
    • வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஆசனூர் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலை யில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் சுமார் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறியது. யானைகள் கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் உலாவியது. தொடர்ந்து யானைகள் சாலையை வழி மறித்தது.

    இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி கொண்டனர். ஆனால் யானைகள் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.

    இதனால் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல்  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக சாலையை வழி மறைத்த யானைகள் கரும்பு லாரிகள் வராததால் சிறுது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதையொட்டி வனப்பகுதி சாலைகளில் அடிக்கடி யானைகள் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரி க்கை விடுத்துள்ளனர்.

    ×