search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை வழியாக சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    தக்கலை வழியாக சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தக்கலை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் வருவாய் ஆய்வாளர் சாமினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தக்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

    ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.சினிமா படப்பாடியில் சேசிங் சம்பவம் நடந்தது.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விளவங்கோடு ஞாரான்விளை பகுதியில் வைத்து காரை மடக்கினார்.அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சினிமா படம் பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×