search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை"

    • அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    தக்கலை:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்து பார்த்த போது மறைத்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவரை போலீஸ் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காப்புகாடு பகுதியில் சேர்ந்த சிந்துகுமார் (வயது 35).இவர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லூர் தேனாம்பாறை பகுதியில் நல்லூர் தேம்பறதல விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் (வயது 71) என்பவர் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
    • சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது.

    தக்கலை:

    குமரிமாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில சமயம் சாரல் மழையாகவும், சில நேரங்களில் பலத்த மழையாகவும் பெய்கிறது. அதே நேரத்தில் பகலில் வெயில் அடிக்கிறது. இவ்வாறு சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால கடந்த 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் 3 இடங்களி லும், நாகர்கோவிலில் மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்தது. அதில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டது.

    இதுகுறித்து திருவி தாங்கோடு சுகாதார துறை அதிகாரி ராமதாசிடம் கேட்ட போது, 'தக்கலை சுற்று வட்டார பகுதியில் பெரும் பாதிப்பு இல்லை. இருப்பினும் முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுகிறது' என்றார்.

    இந்நிலையில் நேற்று தக்கலை அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஒரே நேரத்தில் நூற்றுக்கும மேற்பட்ட நோயாளிகள் திரண்டனர். அவர்கள் வெகுநேரம் காத்திருந்து மருந்து வாங்கி சென்றனர். மேலும் மாத்திரைகள் வழங்கும் இரண்டு பிரிவில் ஒன்று மட்டுமே செயல்பட்டதால் நோயாளிகள் வெகுநேரம் வரிசையில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    • திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
    • இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திருவட்டார்:

    வீயன்னூர் துணை மின் நிலைய உயர் மின்ன ழுத்தப்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்றூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் பேச்சிப்பாறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணியூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ் சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தக்கலை உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டு விளை, பரசேரி, ஆளூர், பேயன்குழி, மொட்டவிளை, காரங்காடு, நெட்டான்கோடு, பூலன்கோடு, வீராணி, தோட்டி யோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங் கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமிவிளை, முளகுமூடு, சாமியார்மடம், கல்லுவிளை, மேக்கா மண்டபம், செம்பருத்திவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல் விளை ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்தநேரத்தில் மின்பாதை மற்றும் மின்கதட கங்களுக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுபோல் குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத் தெரு ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை (வயது 55). இவர் குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அவரது மனைவி செல்லம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்பு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் ராமகிருஷ்ண பிள்ளை அனு மதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல்நலம் பாதித்து அவதிப்பட்டதால் வாழ்வில் வெறுப்படைந்து அவர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் தூக்கில் தொங்கினார்
    • 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம் (வயது 33). இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்கள் கொரோனா காலத்தில் சுய உதவி குழுக்க ளிடம் கடன் வாங்கியதால் கட்ட முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்த கற்பகம், தனது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அனுப்பி விட்டு மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கினார். வெகுநேரம் ஆகியும் தாயார் வெளியே வராததால் இளைய மகள் அழ ஆரம்பி த்தாள். உடனே அருகில் உள்ளவர்கள் கற்பகத்தின் வீட்டுக்கு சென்று கதவை தட்டிய போது திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கற்பகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கற்பகம் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து கற்பகம், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது சம்மந்தமாக மணிக ண்டன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பபாபு. மத்திய ரிசர்வ் போலீசில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி சுபலெஜா (வயது 38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அய்யப்ப பாபுவுக்கு மது பழக்கம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி, 3 மகள்களுடன் சுபலெஜா மாயமானார்.

    இதுகுறித்து அவரது தந்தை அய்யப்பன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெகபர் விசாரணை நடத்தினர். சுபலெஜாவின் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, அவர் சென்னையில் இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் சென்னை சென்று அவர்களை மீட்டு தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் விசாரணையில், தனது கணவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதால் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை சென்றதாகவும் கோவிலுக்கு சென்று ஓய்வு எடுக்கும் போது தனது மனம் மாறியதாகவும் அதன் பிறகு தற்கொலை முடிவை மாற்றியதாகவும் சுபலெஜா போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கேரள அரசு பஸ்
    • தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது பஸ் ஏறி இறங்கியுள்ளது.

    கன்னியாகுமரி:

    மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடந்தது.

    இதில் கால் நடையாகவும், ஓட்டமாகவும், சிலர் இருசக்கர வாகனத்திலும் சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 12 சிவாலயங்களை வழிபடும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

    இதில் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 54), மற்றும் ராஜன் (55) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது சிவாலய ஓட்டத்தை தொடங்கினர்.

    9-வது சிவாலயமான திருவிடைக்கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்வதற்காக தக்கலை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் புலியூர்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் போது எதிரே வந்த கேரளா அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, ராஜன் மீது அந்த பஸ் ஏறி இறங்கியுள்ளது.

    இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். போலீசார் 2 பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தக்கலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கேரளா அரசு பஸ்சை சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வைத்து தேடி வருகின்றனர்.

    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர் அருகே மஞ்சாடிவிளை பகுதியை சேர்ந்தவர் யூஜின் (வயது36).

    இவர் திங்கள் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல பணியை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தக்கலை அருகே சாரோடு பகுதியில் வரும் போது யூஜின் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த இவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யூஜின் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக இவரது மனைவி பிச்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    • காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கொல்லன் விளை. இங்கு புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வார்கள். இன்று காலையும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது பணிகளுக்காக கோவில் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

    இதற்கிடையில் சாலை யில் கிடந்த பெண் தலை யில் காயம் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர்.

    தக்கலை போலீசார், மருத்துவக் குழுவுடன் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், காயத்துடன் கிடந்த பெண்ணை பரிசோ தித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    தொடர்ந்து பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பெண் வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 65 கிலோ பறிமுதல்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப்டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலை மையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். 4கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 கிலோ குட்கா புகை யிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமை யாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மார்த்தாண்டம் இரணியல் குளச்சல் தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    குட்கா புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் கடையில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 66 கிலோ புகையிலை பறிமுதல் செய்ததுடன் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள காடுவெட்டி முகமாற்றூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 72). இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கோழிப்போர்விளை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியே திருவனந்தபுரம் மூர்த்தி கோணம் பகுதியைச் சேர்ந்த நந்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் தங்கநாடார் லிப்ட் கேட்டு உள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட நந்து, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

    அமராவதி பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, சாலையில் பள்ளம் இருந்தது. இதனை கடைசி நேரத்தில் கவனித்த நந்து, திடீரென பிரேக் போட்டு உள்ளார்.

    அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த தங்க நாடார் எதிர்பாராத விதமாக தவறி கீேழ விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சை க்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்க நாடார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகள் மேரி ஐடா புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×