என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தக்கலை அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு
- போலீசார் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
- செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீகலா. இவர்கள் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புலியூர்குறிச்சி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஸ்ரீகலா கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி செயிைன பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டு பின் தொடர்ந்தனர். எனினும் திருடர்கள் வேகமாக தப்பி சென்றனர். இது குறித்து ஸ்ரீகலா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரணியர் அருகே நெல்லியரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி அஜிஷா (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அஜிஷா மோட்டார் சைக்கிளில் அவரது தாயார் வீடான தக்கலை அருகே பாலப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அஜிஷா அணிந்திருந்த 5½ பவுன் தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் நேற்று மாலை தக்கலை அருகே வெவ்வேறு இடங்களில் 2 வாலிபர்கள் திருட்டில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.






