search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்"

    • ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

    ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.


    இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.

    பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.

    இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    * நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.


    * குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.

    * குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

    நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.

    மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

    கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

    இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

    நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

    • மண்எண்ணை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • டத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி, மானிய மண்எண்ணை போன்ற பொருட்கள் கேர ளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் கடத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன. இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அதங் கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் களியக்கா விளை பகுதியில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு குழித்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக் கல்லுகட்டி பகுதியில் வந்தபோது எதிரே வேக மாக வந்த சொகுசு கார் ஒன்று பைக் மீது பயங்கர மாக மோதியது. இதில் மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றுள் ளார். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் காரை எடுத்து செல்ல அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தி யுள்ளனார்.

    மேலும் விபத்து குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரி யவந்தது. மேலும் அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    பின்னர் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த னர். மேலும் விபத்து நடத்தி விட்டு தப்பி ஓடிய கடத்தல் வாகனத்தின் ஓட்டுநர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று மாலை குளச்சல் அருகே லியோன் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வீடுகளுக்கு இடையே அதிக அளவில் ரேசன் அரிசி கடத்து வதற்கு பதுக்கி வைத்தி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 100 சிறு பிளாஸ்டிக் மூட்டை களில் சுமார் 2 டன் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    உடனே அவற்றை பறிமுதல் செய்து உடையார் விளை அரசு உணவு பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் ரேசன் அரிசியை அங்கு பதுக்கி வைத்திருந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவிலிருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் கிட்டங்கிக்கு அனுப்பி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து 58 வேகன்களில் 3600 டன் ரேஷன் அரிசி, சரக்கு ரயில் மூலமாக இன்று நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சினிமாவில் வருவது போல் டெம்போவை அதிகாரிகள் துரத்தி பிடித்தனர்
    • தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையில் ஊழியர்கள் தக்கலை அருகே இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு டெம்போ வைக்கோல் ஏற்றிவந்தது. அதனை அதிகாரிகள் கை காட்டி நிறுத்தினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை பின் தொடர்ந்து துரத்தி சென்ற னர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது சென்றபோது டிரைவர் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் நூதனமாக மறைத்து சுமார் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேர ளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் வருவது போல் அதிகாரிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கடத்தல் வாகனத்தை பிடித்தது அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.
    • குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    சென்னை:

    உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    இந்த நிலையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிரைவர் உள்பட 2 பேர் கைது

    நாகர்கோவில், மார்ச்.14-

    குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
    • பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், தாலுகா அளவிலான ரேஷன் குறைகேட்பு கூட்டம், நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு, மைவாடி நரசிங்காபுரம், உடுமலையில் தொட்டம்பட்டி, ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், குறைகேட்பு கூட்டம் நாளை, 11ம் தேதி நடைபெற உள்ளது.

    காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன்கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.

    ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சார்ந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக நிவர்த்தி செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 6 மாதங்களை கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் ரேசன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்களின் நலன் கருதி அம்மா குளத்தங்கரையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    6 மாதங்களைக் கடந்தும் இன்று வரை கட்டிட வேலை முழுவதும் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது.இதனால் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அங்கிருந்து ரேஷன் பொருட்களை தூக்கி வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அங்காடி கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை நகரில் உள்ள கடை எண்:1, ஓ.புதூர், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ள ங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் குடிமைப்பொருட்கள் அனைத்தும் நியாய விலைக்கடைகளின் மூலம் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 4 லட்சத்து 20ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேச ன்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் செய்யப்பட்டு, நியாய விலைக்கடைகளுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொது மக்களிடம் கேட்டு அறியப்பட்டு வருகிறது.

    இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் மேகநாதரெட்டி சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்தார். உள்நோயா ளிகள், வெளி நோயாளிகள், மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப்பிரிவுகள், மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து, ஆகியவை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச் சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) விஜய்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×