search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி-திப்ருகர் சிறப்பு ரெயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும்
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி-திப்ருகர் சிறப்பு ரெயிலை நெல்லை, மதுரை வழியாக இயக்க வேண்டும்

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக வட மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கை புறக்கணி க்கப்பட்டு விடப்படும் புதிய ரெயில்கள், வழக்கம் போல் கேரளாவை மையப்ப டுத்தியே அறிவிக்கப்ப டுகின்றன. இதற்கான காரணம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநிலத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் மாநி லத்திற் குட்பட்ட பகுதிகள் வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.

    ஆனால் குமரி மாவட்ட ரெயில்வே இருப்புப் பாதைகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது.

    தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் பொது மேலாளர், ரெயில்கள் இயக்கம் அதிகாரி, முதன்மை வணிக அதிகாரி பயணிகள் பிரிவு என முக்கிய பொறுப்புகளில் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் முழுக்க முழுக்க பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் வட மாநில ரெயில்கள் கேரளா வழியாக இயக்கப்படுகின்றன.

    தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை யிடமாக கொண்ட வட கிழக்கு எல்லை ரெயில்வே மண்டலம் சார்பாக திப்ருகர்-கன்னியாகுமரி அறிவிக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயிலும் கேரளா வழியாகத் தான் செல்கிறது.

    இந்த ரெயிலை திருநெல்வேலி, மதுரை வழியாக இயக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கை. இந்த ரெயிலுக்கு 2-ம் கட்ட பிட்லைன் பராமரிப்பு, நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் செய்யப்படுகிறது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிட்லைன் பராமரிப்பு இட நெருக்கடி ஏற்படுகிறது.இதன் காரணமாக தென் மாவட்ட பயணிகள் பயன்படுத்தும் விதமாக புதிய ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து தற்போது வாராந்திர ரெயில்களாக இயக்கப்படும் திருக்குறள், ஹவுரா, மும்பை போன்ற ரெயில்களை தினசரி ரெயில்களாக மாற்றம் செய்து இயக்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது பிட்லைன் இட நெருக்கடியை காரணம் காட்டி இயக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.

    நாகர் கோவில்-ஷாலிமார் ரெயிலும் கேரள பயணிகள் வசதிக்காக தான் இயக்கப் படுகிறது. இந்த நிலையை மாற்ற, இந்த ரெயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால், அந்த ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி விடலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

    இந்த வழியில் புதிய ரெயில்களை இயக்கா விட்டாலும் பரவாயில்லை. கேரள பயணிகளுக்கு பயன்படும் வகையில் சுற்று ரெயில்களை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இயக்காமல் இருந்தால் போதும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

    மேலும் இது போன்ற ரெயில்கள் இயக்குவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமானால், நாகர்கோவில் துணை கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரியில் இருந்து பால ராமபுரம் வரை யிலும் நாகர்கோவில்-திருநெல்வேலி வரையிலும் உள்ள இருப்புப் பாதைகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றனர்.

    Next Story
    ×