மணவாளக்குறிச்சி அருகே தென்னை மட்டையால் மாமனாரை தாக்கிய மருமகன்

புகாரின் பேரில் போலீசார் வழக்குமுன்விரோதத்தால் தாக்குதல்
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடை சேர்ந்தவர் ராஜன், தொழிலாளி.

இவரது மகள் சிவகலாவை இளையான் விளையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 38) திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

இதன் காரணமாக சிவ கலா, கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் ராஜன் மீது ஸ்டீபன் ஆத்திரம் அடைந்தார்.இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.

இந்த முன்விரோதத்தில் ராஜன் வீட்டுக்கு வந்த ஸ்டீபன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து ராஜனை தாக்கி உள்ளார். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்ததாக போலீசில் ராஜன் புகார் செய்தார்.

அதன் பேரில் மணவா ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்த னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com