மணவாளக்குறிச்சி அருகே அதிக மாத்திரைகள் சாப்பிட்டு 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர்.கணவன்-மனைவி அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
மணவாளக்குறிச்சி அருகே அதிக மாத்திரைகள் சாப்பிட்டு 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
Published on

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வகுமாரி (வயது 38). இவர்களுக்கு 15 மற்றும் 12 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி அதிக மாத்திரையை தின்று மயங்கி கிடந்தார்.

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயகுமாரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com