search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மாயம்"

    • அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
    • 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:-

    ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

    இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .

    விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-

    ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.

    நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள்.

    அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் வாகையடி மேலரத வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சத்யா (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று சத்யா வீட்டில் இருந்து துணி எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து சத்யாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சத்யா கிடைக்கவில்லை. அவரது தாயார் மாரியம்மாள் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் டவர் உதவி யுடன் சத்யாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சந்தியா பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம்கி ராமத்தை சேர்ந்தவர்ஏழுமலை. இவரது மகள் சந்தியா (17). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்தவரை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் அவரது தாய் சரிதா புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.

    • பாபு கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
    • வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சின்னூர் வடக்கு பகுதியை சேர்ந்த வர் பாபு மீனவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்து விட்டு மாலை கரைக்கு திரும்பினார். இதனையடுத்து வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாபு பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர்.
    • கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் திருவாக் கவுண்டனூர் வசந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பத்மாவதிக்கு 7 வருடம் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக தாய் மணிமேகலை வீட்டில் இருந்து பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பத்மாவதி கிடைக்கவில்லை.

    புகார்

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் தாய் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவதியை தேடி வருகின்றனர். 

    • புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தாரணிபிரியா (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர். கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார். அவரை மனோஜ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது தகராறு ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீனாவுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து
    • அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு பெரிய சேமூர் கள்ளன் காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரது மகள் மீனா (23). பி. பி.எம். பட்டதாரி.

    மீனா வுக்கும், அதேப் பகுதியை சேர்ந்த முருகானந்தா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணம் ஆனதிலிருந்து மீனாவுக்கும் அவரது கண வருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இரு வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மீனா கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதையடுத்து சம்பவ த்தன்று குலதெய்வ கோவி லுக்கு செல்ல மீனாவை அவரது தந்தை அழைத்து உள்ளார். ஆனால் மீனா வர மறுத்து தந்தை மீது கோபித்துக் கொண்டதாக தெரிகிறது .

    இந்நிலையில் வீட்டில் இருந்த மீனா திடீரென மாயமாக உள்ளார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். எனினும் மகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலை யத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மீனாவை தேடி வரு கின்றனர். 

    • மதுரை அருகே பெண் திடீரென மாயமானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது46). இவரது மனைவி வசுமதி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தலையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென்று மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை? பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
    • அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை.

    அயனாவரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி நந்தினி. 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பொன்னேரி போலீசார் தேடிவருகிறார்கள்.

    • பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1 மாதத்தில் மாயமான இளமபெண்ணை தேடி வருகிறார்கள். 

    • இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது43). இவர் கோவையில் போலீசாராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி தமிழ்தென்றல் (39). இவர் தருமபுரி குடும்ப நல கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் புட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தமிழ்தென்றலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதனால் தமிழ்தென்றலை அவரது கணவர் மாயகண்ணன் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து மாயகண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தமிழ்தென்றலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
    • நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் கூர்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்தமிழரசி (வயது29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    மணிவண்ணன் ஆந்திராவில் சிப்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தமிழரசி தனது செல்போன் பழுதாகி விட்டதால் அதனை சரி செய்ய பென்னாகரம் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன மகன் முத்தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    இதுகுறித்து கணவர் மணிவண்ணன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்தமிழரசியை தேடிவருகின்றனர்.

    ×