search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "report to police"

    • கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாச்சார்குப்பத்தில் வீடு புகுந்து 2 லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் ஆம்பூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    இவரதுவீட்டில் மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு லேப்டாப், ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்றுள்ளனர்.

    நேற்று இரவு மாடிக்கு சென்ற செல்வம் கதவு திறந்திருப்பதை கண்டு ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

    • பாபு கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
    • வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை சின்னூர் வடக்கு பகுதியை சேர்ந்த வர் பாபு மீனவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்து விட்டு மாலை கரைக்கு திரும்பினார். இதனையடுத்து வீட்டிற்கு சென்றபோது வீட்டிலிருந்த பாபுவின் மகள் திடீரென காணாமல் போனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாபு பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர் 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
    • மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அருகே வடகிரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 52) இவர் கடந்த 24-ந்தேதி வீட்டிலிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம் ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஜெயசெல்வியிடருந்து 4 பவுன் நகையை திடுடி சென்றார்.

    இதுகுறித்து மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சேத்தியாதோப்பு பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆசைகுமார் (வயது 49) என்பதும் வடகிரிராஜபுரம் பகுதியில் உள்ள மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புகொண்டார்.

    உடனே போலீசார் ஆசைகுமாரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆசைகுமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார்..
    • அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.,

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் சுனாமி நகரைச்சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து மாற்றுத்திறனாளியானார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ல் நாகப்பட்டினம் வெள்ளப்பள்ளத்தைச்சேர்ந்த ஜெயபால் மகள் அபிநயாவை (28) இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளது. அபிநயா கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நாகப்பட்டினம் செல்வதாக கூறி, 2 குழந்தைகளோடு வெளியில் சென்ற அபிநயா இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து, சவுந்தரராஜ் அபிநயா வீட்டில் கேட்டபோது இங்கு வரவில்லையென கூறியுள்ளனர். கடந்த 2 வாரமாக பல்வேறு உறவினர்கள் வீட்டில் தேடியும் அபிநயா கிடைக்காதததால், சவுந்தரராஜ், காரைக்கால் கோட்டுச்சேரி செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிநயா மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    • சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் ஒதியத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (வயது 40). திருமணமானவர். அதே ஊரில் வசிப்பவர் எமிலிமேரி சத்துணவு கூடத்தில் பணி செய்கிறார்.இவர் சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித்தருகிறேன். பணம் கொடு என்று டெய்சியிடம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று டெய்சி கூறவே, நகையை அடமானம் வைத்தாவது பணம் கொடு, நான் நிச்சயமாக சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார்இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை கடந்த டிசம்பர் 26-ந்தேதி எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து எமிலிமேரியிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று சில தினங்களுக்கு முன்பாக டெய்சி கேட்டார். இதற்கு எமிலிமேரி சரியான பதில் கூறவில்லை.அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்எனவே டெய்சி 3 பெண் குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து மேலே ஊற்றிக் கொண்டார். மேலும், 3 பெண் குழந்தைகள் மீது ஊற்ற முயற்சித்தார்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். டெய்சியுடன் வந்த 3 பெண் குழந்தைகளை பாதுகாப்பாக அமரவைத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்
    • கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பஸ் நிலையம் புறக்காவல் நிலையத்திற்கு எதிரில் செல்போன் கடை உள்ளது. நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    வழக்கம்போல் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் நகர போலீசார் திருட்டு நடந்த கடைக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு முன்பு இருக்கும் கடையில் மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது.

    • காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷி ன்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார்.
    • ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூர் சவுதா நகரில் வசித்து வருபவர் ஞான சேகரன்(வயது64).இவர் காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தொடர்ந்து, அதே வங்கியில் ஏ.டி.எம் மெஷின்களுக்கு சேனல் மேலாளராக இருந்தது. காரைக்காலில் 17 ஏ.டி.எம் மெஷின்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து வருகிறார். இந்நிலையில், காரை க்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்-ல் மர்ம நபர் ஒருவர் கையில் இரும்பு ஆயுதம் கொண்டு உடைத்து பணம் திருட முயன்றுள்ளார். பல முறை முயற்சித்தும் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வங்கி ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயன்றதும் ஞானசே கரனின் மொபைலுக்கு ஏ.டி.எம் மெஷின்களின் கண்காணிப்பு காமிரா காட்சிகள் வந்தது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் தலைமையகத்துக்கு ஞானசேகர் தகவல் அளித்தார். அதனை தொடர்ந்துஞானசேகரன் ஏ.டி.எம் க்கு சென்று பார்த்த பொழுது, எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசேகரன் காரைக்கால் நகர டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை ஆயுதம் கொண்டு உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே வியாபாரி வீட்டு கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கோவிலுக்கு சென்ற அய்யனார் நேற்று மாலை வீடு திரும்பினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். மளிகை கடை நடத்திவருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 1-ம்தேதி பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவிலுக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அய்யனார் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கதவினை நெம்பி வீட்டினுள் புகுந்தனர். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 8 பவுன் நகை மற்றும் 25000 ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    கோவிலுக்கு சென்ற அய்யனார் நேற்று மாலை வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அய்யனார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடி சென்ற மர்மகும்பலை வீசி தேடி வருகின்றனர்.

    ×