என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் புகார்Attempted arson"

    • சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் ஒதியத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி (வயது 40). திருமணமானவர். அதே ஊரில் வசிப்பவர் எமிலிமேரி சத்துணவு கூடத்தில் பணி செய்கிறார்.இவர் சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித்தருகிறேன். பணம் கொடு என்று டெய்சியிடம் கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று டெய்சி கூறவே, நகையை அடமானம் வைத்தாவது பணம் கொடு, நான் நிச்சயமாக சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று எமிலிமேரி டெய்சியிடம் கூறியுள்ளார்இதனை நம்பிய டெய்சி 4 பவுன் தங்கச் சங்கிலியை கடந்த டிசம்பர் 26-ந்தேதி எமிலிமேரியிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து எமிலிமேரியிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று சில தினங்களுக்கு முன்பாக டெய்சி கேட்டார். இதற்கு எமிலிமேரி சரியான பதில் கூறவில்லை.அதிர்ச்சியடைந்த டெய்சி இது தொடர்பாக கண்டாச்சிபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்எனவே டெய்சி 3 பெண் குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து மேலே ஊற்றிக் கொண்டார். மேலும், 3 பெண் குழந்தைகள் மீது ஊற்ற முயற்சித்தார்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். டெய்சியுடன் வந்த 3 பெண் குழந்தைகளை பாதுகாப்பாக அமரவைத்தனர். இது தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×