என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்தியாதோப்பு அருகே மூதாட்டியிடம் நகை திருடிய வழக்கில் வாலிபர் கைது
- மர்ம நபர் 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
- மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
சேத்தியாதோப்பு அருகே வடகிரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 52) இவர் கடந்த 24-ந்தேதி வீட்டிலிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம் ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஜெயசெல்வியிடருந்து 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
இதுகுறித்து மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சேத்தியாதோப்பு பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆசைகுமார் (வயது 49) என்பதும் வடகிரிராஜபுரம் பகுதியில் உள்ள மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புகொண்டார்.
உடனே போலீசார் ஆசைகுமாரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆசைகுமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






