கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்

பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
கோவையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்
Published on

கோவை,

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1 மாதத்தில் மாயமான இளமபெண்ணை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com