search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் மாயம்"

    • போலீசில் கணவர் புகார்
    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 32), தாமரை பூ வியாபாரி.

    இவரது மனைவி ஜெயஸ்ரீ (22), பட்டதாரி.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு ஜெயஸ்ரீ, கணவருடன் தனியாக வசித்து வந்தாக தெரிகிறது. ஆறுமுகம் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாராம்.

    நேற்று முன்தினமும் அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இரவு 8 மணிக்கு அவர் வந்தபோது, வீட்டில் ஜெயஸ்ரீ இல்லை. வெளியில் எங்காவது சென்றிருப்பார் என ஆறுமுகம் கருதினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனை தொடர்ந்து உறவினர் வீடுகளில் ஆறுமுகம் விசாரித்தார். ஆனால் ஜெயஸ்ரீ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீயின் தோழிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் கிடைக்கவில்லை.

    ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    புதுப்பெண்ணான ஜெயஸ்ரீ கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில புதுப்பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகளை காஞ்சிபுரம் சேர்ந்த வாலிபருக்கு கடந்த 23- 3 -2023 அன்று திருமணம் செய்து வைத்தார்.

    கடந்த ஆடி மாதத்தில் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் ஆடி மாதம் முடிந்து கணவர் வீட்டிற்கு மகனை அனுப்பி வைக்க தந்தை முடிவு செய்தார்.

    புதுபெண் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார். மகளிடம் ஏன் கனவர் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறாய் என்று தந்தை கேட்டுள்ளார்.

    கணவர் தன்னிடம் விவாகரத்து கேட்பதாக இளம் பெண் கூறினார். இந்த நிலையில் இளம்பெண்ணின் தந்தை நான் சமாதானம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இளம்பெண் யாரிடமும் கூறாமல் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். மகள் வீட்டில் இல்லாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் அவரைத் தேடி உள்ளார்.

    மகள் கிடைக்காததால் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • டீ குடிக்க செல்வதாக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடை பெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார்.

    அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்தபெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார்.
    • பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் சிங்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் பத்மாவதி (வயது19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த மாதம் 29-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாது மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகளை பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள், முனீஸ்வரி, ராணி, பழனி, திட்டப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய 5 பேரும் உடந்தையாக உள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயமான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 3-ந்தேதி புதுமண தம்பதி இருவரும் பபிஷாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.
    • திருமணம் ஆன பிறகும் முன்பு காதலித்த வாலிபருடன் பபிஷா சுற்றி திரிந்துள்ளார்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 27). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்த பபிஷா (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த 3-ந்தேதி புதுமண தம்பதி இருவரும் பபிஷாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பபிஷாவை விட்டு விட்டு, விஷ்ணு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அன்று மாலையில் சென்று பார்த்தபோது பபிஷாவை காணவில்லை. இதுகுறித்து அவரது தாயாரிடம் கேட்டபோது, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

    தனது மனைவி மாயமானது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் விஷ்ணு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பபிஷாவை அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னை சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் இருந்த பபிஷாவை போலீசார் மீட்டனர். அவருடன் தங்கியிருந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பதும், அவருடன் திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பபிஷாவுக்கு பழக்கம் இருந்ததும், அதில் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை காதலித்ததும் தெரிய வந்தது.

    இந்நிலையில் மற்றொரு வாலிபருமான விஷ்ணுவை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன பிறகும் முன்பு காதலித்த வாலிபருடன் பபிஷா சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் தான் திருமணம் முடிந்த 40-வது நாளில் கணவரை தவிக்க விட்டு விட்டு காதலனுடன் பபிஷா ஓட்டம் பிடித்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பபிஷாவை போலீசார் மார்த்தாண்டத்திற்கு அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தாரணிபிரியா (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேனிலவிற்காக கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி மதுரையில் இருந்து கோவைக்கு வந்தனர். கோவை ராம்நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபடி சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி ஈஷா யோகா மையத்துக்கு சென்று சுற்றி பார்த்தனர். அங்கு இரவில் நடைபெறும் லேசர் ஷோ முடிந்து விபூதி வாங்குவதற்காக மனோஜ் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மனைவி தாரணிபிரியா மாயமாகி இருந்தார். அவரை மனோஜ் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஷேர் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோஜ் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்து கொண்ட பெண் எதற்காக மனோஜிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றார், அவர்களுக்குள் எதாவது தகராறு ஏற்பட்டு கோபத்தில் புறப்பட்டுச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
    • பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் ஸ்ரீரெங்கராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துலெட்சுமி(வயது 26). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் வைத்து டியூசன் நடத்தி வருகிறார்.

    இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி நேற்று முருகன் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றுவிட்டார். அவரது மனைவி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

    மாலையில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முத்துலெட்சுமியை காணவில்லை. உடனே உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் முத்துலெட்சுமியை தேடி வருகின்றனர்.

    • கோவை அருகே பரபரப்பு சம்பவம்.
    • 2 பேரும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அருகே உள்ள கே.வடமதுரையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட து. நாளடைவில் இது காதலாக மாறியது . 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் வீட்டி ற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை கல்லூரியில் இருந்து நிறுத்தினர். ஆனால் இளம்பெண் தனது காதலை தொடர்ந்து வந்தார்.

    இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி வாலிபர் ஒருவரை பார்த்து நிச்சயம் செய்தனர்.பின்னர் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திரும ணம் நடந்தது.சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து திருமணமான 2½ மாதத்தில் கணவரை தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • நடராஜன் பேக்கரியில் வேலை பார்த்தபோது அபிநயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார்.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்தபோது அங்கு வேலை செய்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்துடன் அபிநயா திடீரென மாயமானார். அவரை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நடராஜன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் நகை-பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அபிநயாவின் குடும்ப பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
    • மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.

    அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 35 வயது வாலிபர் திருமணமான 3-வது நாளில் தன்னை தவிக்க விட்டு சென்ற மனைவியை மீட்டு தரும்படி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள எம்.என்.ஜி. வீதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 21-ந் தேதி 35 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்தது.

    நேற்று புதுப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்றனர். அங்கு இருந்த புதுப்பெண் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது உறவினர் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து 35 வயது வாலிபர் திருமணமான 3-வது நாளில் தன்னை தவிக்க விட்டு சென்ற மனைவியை மீட்டு தரும்படி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    சுகுணாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் அகிலா (24). இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவருக்கு அவரது பெற்றோர் அடுத்த மாதம் 7-ந் தேதி திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலா காந்திபுரம் செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. சிறிது நேரத்துக்கு பின்னர் அவர் தனது தந்தைக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் தனது திருமணம் பிடிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என கூறியிருந்தார்.

    இது குறித்து செல்வகுமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

    • திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.
    • 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    அரியலூர்

    காரைக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் பால்ராஜ்(வயது 30). இவருக்கும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகள் கஸ்தூரிக்கும்(21) கடந்த மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ேநற்று முன்தினம் இரவு திடீரென கஸ்தூரி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×