பண்ருட்டி அருகே தந்தை சாவுக்கு சென்ற புதுப்பெண் மாயம்

வைஷ்ணவிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை.
பண்ருட்டி அருகே  தந்தை சாவுக்கு சென்ற புதுப்பெண் மாயம்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் அவரது மனைவி வைஷ்ணவி. (வயது 19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி வைஷ்ணவியின் தந்தை இறந்து போனார். இதற்காக வைஷ்ணவி பெரிய காட்டுபாளையம் கிராமத்துக்கு சென்றார்.

அதன்பின்னர் அவர் மாளிகம்பட்டு கிராமத்துக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வைஷ்ணவி அங்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் வைஷ்ணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து நந்தகோபால் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து வைஷ்ணவி என்ன ஆனார் எங்கு சென்றார் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com