கணவரை கழற்றி விட்டு காதலனுடன் புதுப்பெண் மாயம்

கோவை அருகே பரபரப்பு சம்பவம்.2 பேரும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கணவரை கழற்றி விட்டு காதலனுடன் புதுப்பெண் மாயம்
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை துடியலூர் அருகே உள்ள கே.வடமதுரையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட து. நாளடைவில் இது காதலாக மாறியது . 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் வீட்டி ற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை கல்லூரியில் இருந்து நிறுத்தினர். ஆனால் இளம்பெண் தனது காதலை தொடர்ந்து வந்தார்.

இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி வாலிபர் ஒருவரை பார்த்து நிச்சயம் செய்தனர்.பின்னர் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் திரும ணம் நடந்தது.சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது அவர் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து திருமணமான 2½ மாதத்தில் கணவரை தவிக்க விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com