நாங்குநேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் மாயம்

இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
நாங்குநேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் மாயம்
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் ஸ்ரீரெங்கராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துலெட்சுமி(வயது 26). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் வைத்து டியூசன் நடத்தி வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி நேற்று முருகன் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றுவிட்டார். அவரது மனைவி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

மாலையில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முத்துலெட்சுமியை காணவில்லை. உடனே உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் முத்துலெட்சுமியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com