ஆடி மாதம் தந்தை வீட்டிற்கு வந்த புதுப்பெண் மாயம்

கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
ஆடி மாதம் தந்தை வீட்டிற்கு வந்த புதுப்பெண் மாயம்
Published on

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகளை காஞ்சிபுரம் சேர்ந்த வாலிபருக்கு கடந்த 23- 3 -2023 அன்று திருமணம் செய்து வைத்தார்.

கடந்த ஆடி மாதத்தில் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் ஆடி மாதம் முடிந்து கணவர் வீட்டிற்கு மகனை அனுப்பி வைக்க தந்தை முடிவு செய்தார்.

புதுபெண் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்தார். மகளிடம் ஏன் கனவர் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறாய் என்று தந்தை கேட்டுள்ளார்.

கணவர் தன்னிடம் விவாகரத்து கேட்பதாக இளம் பெண் கூறினார். இந்த நிலையில் இளம்பெண்ணின் தந்தை நான் சமாதானம் செய்து வைக்கிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம்பெண் யாரிடமும் கூறாமல் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். மகள் வீட்டில் இல்லாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் அவரைத் தேடி உள்ளார்.

மகள் கிடைக்காததால் இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com