சுசீந்திரம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மாயம்

போலீசில் கணவர் புகார்சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சுசீந்திரம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மாயம்
Published on

என்.ஜி.ஓ.காலனி :

சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 32), தாமரை பூ வியாபாரி.

இவரது மனைவி ஜெயஸ்ரீ (22), பட்டதாரி.

இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு ஜெயஸ்ரீ, கணவருடன் தனியாக வசித்து வந்தாக தெரிகிறது. ஆறுமுகம் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாராம்.

நேற்று முன்தினமும் அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இரவு 8 மணிக்கு அவர் வந்தபோது, வீட்டில் ஜெயஸ்ரீ இல்லை. வெளியில் எங்காவது சென்றிருப்பார் என ஆறுமுகம் கருதினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனை தொடர்ந்து உறவினர் வீடுகளில் ஆறுமுகம் விசாரித்தார். ஆனால் ஜெயஸ்ரீ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீயின் தோழிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் கிடைக்கவில்லை.

ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புதுப்பெண்ணான ஜெயஸ்ரீ கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில புதுப்பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com