பெண் மாயம்

மதுரை அருகே பெண் திடீரென மாயமானார். ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மாயம்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது46). இவரது மனைவி வசுமதி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தலையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென்று மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை? பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com