search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing girl"

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் செல்வ நாயகபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பிரதீபா (வயது17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளிேய சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்த செல்வம் மகள் பாவனா (16). பிளஸ்-1 படித்து வருகிறார். செல்வத்திற்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் பிரிந்து விட்டனர். செல்வம் மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவரையும், காஞ்சனா ஊத்துப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

    பாவனா தனது பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார் . இது குறித்து அவரது தாத்தா சந்திரன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    லோயர்கேம்ப் நாரா யணன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மாமியா ருக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்கு ம்போது ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து குமுளி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1 மாதத்தில் மாயமான இளமபெண்ணை தேடி வருகிறார்கள். 

    • சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.
    • இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த வர் பழனிச்சாமி. இவரது மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன சரோஜாவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்நிலையில் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள கிணற்றில், அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் மிதப்பதாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கிணற்றில் இறந்து கிடந்தவர், வேல கவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த சரோஜா என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு வந்த சிறுமி மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • மதுரையில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ஒரு சில குடும்பத்தினர் டெண்ட்அமைத்து வசித்து வருகின்றனர். பச்சைகுத்துவது, ஊசி,பாசி உள்ளிட்ட பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் துருவசாமி என்பவரது 13 வயது மகள் தினசரி பஸ்நிலையத்தில் பொட்டு மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்றுவருவார்.

    நேற்று காலையில் பஸ்நிலையத்திற்கு வந்த சிறுமி மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் சகோதரர் நகர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று அந்த சிறுமி மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஒரு வாலிபருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வருவதை அறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து சிறுமியை போலீசார் மீட்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வடமதுரை அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனை திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்ததால் அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
    • மாணவியின் பெற்றோரிடம் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று போலீசார் சமரம் செய்து அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள தம்பிநாயக்கன்பாறைபட்டியை சேர்ந்தவர் சுப்பையா மகள் நதியா(20). இவர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கரூர் மாவட்டம் வெள்ளியணை முத்தக்காம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(22) என்பவர் தனது உறவினரை பார்க்க அடிக்கடி இங்கு வருவது வழக்கம். அப்போது நதியாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.


    இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை வடமதுரை போலீசில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.

    போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த நதியா தனது காதலனை திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது கணவருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். இதனையடுத்து மாணவியின் பெற்றோரிடம் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து ரமேஷ் குடும்பத்தினருடன் அவர் புறப்பட்டு சென்றார்.

    போலீஸ் நிலையத்தில் தங்களது மகள் காதல் கணவருடன் சென்றதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    கோவை அருகே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சிறுமி நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்த அவர் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

    ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீட்டின் அருகே உள்ள சந்தில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும். சிறுமியின் சாவுக்கு நீதி வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ×