மாயமான மகள் மணமகனுடன் வந்ததால் பெற்றோர் கண்ணீர்

வடமதுரை அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனை திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்ததால் அவரது பெற்றோர் கதறி அழுதனர். மாணவியின் பெற்றோரிடம் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று போலீசார் சமரம் செய்து அனுப்பி வைத்தனர்.
காதலன் ரமேசுடன் கல்லூரி மாணவி
காதலன் ரமேசுடன் கல்லூரி மாணவி
Published on

வடமதுரை:

இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை வடமதுரை போலீசில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.

போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த நதியா தனது காதலனை திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது கணவருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். இதனையடுத்து மாணவியின் பெற்றோரிடம் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து ரமேஷ் குடும்பத்தினருடன் அவர் புறப்பட்டு சென்றார்.

போலீஸ் நிலையத்தில் தங்களது மகள் காதல் கணவருடன் சென்றதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com