திண்டுக்கல்லில் மாயமான சிறுமி மதுரையில் மீட்பு

திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு வந்த சிறுமி மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.மதுரையில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ஒரு சில குடும்பத்தினர் டெண்ட்அமைத்து வசித்து வருகின்றனர். பச்சைகுத்துவது, ஊசி,பாசி உள்ளிட்ட பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் துருவசாமி என்பவரது 13 வயது மகள் தினசரி பஸ்நிலையத்தில் பொட்டு மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்றுவருவார்.

நேற்று காலையில் பஸ்நிலையத்திற்கு வந்த சிறுமி மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் சகோதரர் நகர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அந்த சிறுமி மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஒரு வாலிபருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வருவதை அறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து சிறுமியை போலீசார் மீட்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com