search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலா எஸ்1 ப்ரோ"

    ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. #Apple
     


    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உருவாகி வருகின்றன.

    இந்த நிலையில் இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்ப்யூட்டர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    அதை ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்ப்யூட்டர் 666.68 அமெரிக்க டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.



    ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை வடிவமைத்தனர். இவற்றில் 175 யூனிட்கள் விற்பனையான நிலையில், தற்போது ஒன்றுதான் ஏலத்தில் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த கம்ப்யூட்டர் ஜூன் 2018-இல் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சீராக வேலை செய்வது குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.

    மற்ற ஆப்பிள் 1 போர்டுகளை போன்று இல்லாமல், ஏலத்தில் விற்பனையான போர்டில் எவ்வித மாறுதல்களும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் இதன் ப்ரோடோடைப் பகுதி பயன்படுத்தாமல், சுத்தமாக இருக்கிறது.
    கோபி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் மினிசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 15). கவுந்தப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிள்ஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி மாணவி ஆனந்தி பள்ளிக்கு சென்றார். ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தந்தை மினிசாமி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் ‘‘என் மகளை எனது உறவினரான மாதேஸ்வரன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து என் மகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

    இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் இது பற்றி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி ஆனந்தியை தேடி வருகிறார்.

    கோவையில் வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த டீக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் - தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாய் தனியாக பிரிந்து சென்று வேடப்பட்டி நாகராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவருடன் மாணவி தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்த போது வெங்கிடாபுரத்தை சேர்ந்த கோவை ரெயில் நிலையத்தில் ஆவின் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் மாணவியை அழைத்து சென்று பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்.

    உயர்கல்விக்கு பிளஸ்-1 தேர்வு மார்க் தேவையில்லை என்ற அரசின் முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
    சென்னை:

    பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருட பாடத்திட்டத்தை கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவு தேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

    பிளஸ்-1 பாட திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள் நடத்தாமல் புறக்கணித்து விட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாட திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததே காரணம் என தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொது தேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என்றார். தற்போதைய திட்டத்தினால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களை சரிவர படிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

    எனவே உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

    இதற்கு சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசின் இத்தகைய முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை ஏற்படும்.

    அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்திட்டத்தை விட பிளஸ்-2 பாடத்திட்டத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏனெனில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்தை தவிர்த்து விட்டு பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்தது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

    மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களின் வழியே தான் போட்டி தேர்வுக்கான பயிற்சியை பெற முடியும்.

    இந்த சூழ்நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் போது மாணவர்களால் நல்ல ஊக்கத்துடன் படிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.

    இருந்த போதிலும் அரசின் தற்போதைய முடிவை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். உயர் கல்வியில் சேர 1200-க்கு பதிலாக 600 மதிப்பெண் சான்றிதழே போதுமானது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை பெரிதளவு குறைக்கும் என தெரிவித்துள்ளனர். #Plus1 #Plus2 #TNMinister #Sengottaiyan
    தக்கலை அருகே உடல் பருமனாக இருந்ததை கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலை அருகே திக்கணங்கோடு கீழ தாரவிளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஆஷா, (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனாக இருந்த ஆஷாவை பள்ளி மாணவிகளும், அக்கம் பக்கத்தினரும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனால் ஆஷா மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று ஆஷா வீட்டின் ஒரு அறையில் இருந்தார். அப்போது அந்த அறையில் இருந்து ஆஷாவின் குரல் கேட்டது. இதையடுத்து அவரது தந்தை தேவராஜ் ஓடிச்சென்று பார்த்தபோது ஆஷா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் தொங்கிய ஆஷாவை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரவீன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர். மேலும் மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலை கல்வீசி தாக்கிய பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் சிக்கினர்.
    நாகர்கோவில்:

    மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பார்வதிபுரம் ரெயில்வே பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளம் பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் ரெயில் மீது கற்களை சரமாரியாக வீசி விட்டு தப்பியோடிவிட்டனர்.

    இதில் கல் தலையில் பட்டதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் சக பயணிகள் அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளித்தனர். அதற்குள் ரெயில் நாகர் கோவில் ரெயில்நிலையத்தை வந்தடைந்தது. நடந்த விவரங்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் தெரிவித்த அந்த பெண் அது பற்றி புகாரும் செய்தார்.

    இதை தொடர்ந்து நாகர் கோவில் ரெயில்வே பாது காப்புப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண் புகாரில் கூறிய இடத்திற்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் அங்கிருந்து தப்பியோடினார்கள்.

    உடனே போலீசார் விரட்டிச் சென்று அவர்கள் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தான் ரெயில் மீது கல் வீசியவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் பிளஸ்-1 மாணவராவார். மற்ற 2 பேரும் சிறுவர்கள் ஆகும்.

    இதை தொடர்ந்து அந்த 3 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். மாணவர் மற்றும் சிறுவர்களின் எதிர் காலம் கருதி அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர வில்லை. அதேசமயம் கல் வீச்சில் பெண் காயம் அடைந்தது பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறிய போலீசார் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு அவர்கள் 3 பேரையும் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    பெரியகுளம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது 16 வயது மகள் சருக்கு பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அவரது பெற்றோர்கள் தனது மகளின் தோழிகளிடம் விசாரித்தனர். அதில் அதே பள்ளியில் படிக்கும் மாணவருடன் அவர் பழகி வந்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து தங்கராஜ் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்னக் கொடி மகன் ராஜேஷ். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதாகவும், அவர்தான் தனது மகளை கடத்திச் சென்றிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச் சென்ற மாணவரையும் தேடி வருகின்றனர்.

    ஈத்தாமொழியில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    கன்னியாகுமரி:

    ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றார்.ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை தேடி பள்ளிக்கு சென்றனர். அங்கு மாணவியை காணவில்லை.

    இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 29-ந்தேதி பள்ளிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. ஊரில் விசாரித்த போது எனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது23) என்பவர் கடத்தி சென்றுள்ளார். எனவே எனது மகளை மீட்டு கடத்திச்சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த புகார் மனுவில்  கூறியிருந்தனர்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திச் சென்ற ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
    ஜேடர்பாளையத்தில் கடத்தப்பட்ட பிளஸ்-1 மாணவியை போலீசார் மீட்டனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி அன்று பள்ளிக்கு சென்ற இம்மாணவி இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர், மகளை பள்ளி, உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் மகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் மாணவி வைத்துள்ள செல்போனை சைபர் கிரைம் போலீசார் கணினி மூலம் ஆய்வு செய்த போது, ஏற்காட்டில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் ஏற்காட்டிற்கு சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரை ஏற்காடு, கொலக்கூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (21) என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    போலீசார் விசாரிக்கையில், மாணவி வைத்துள்ள செல்போனில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக விஜயகுமாரின் செல்போனுக்கு அழைப்பு போய் உள்ளது. தவறுதலாக அழைப்பு வந்து விட்டது என்று கூறிய பிறகும், விஜயகுமார் கேட்காமல் தொடர்ந்து செல்போனில் கால் செய்து பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர், ஆசை வார்த்தை காட்டி ஜேடர் பாளையத்துக்கு சென்று மாணவியை விஜயகுமார் கடத்திச் சென்றது தெரியவந்தது. விஜயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று விட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபுரம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் சக்திவேலு. லாரி டிரைவர். இவரது 17-வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மாணவி இல்லை.

    இதையடுத்து சக்திவேலு வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை அருகே பரீட்சையில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-1 மாணவி தீக்குளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே காணப்பாடியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் புவனேஸ்வரி (வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளியில் பரீட்சை நடந்தது. இதில் புவனேஸ்வரி குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×