என் மலர்

  நீங்கள் தேடியது "plus one student"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி அருகே 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  தர்மபுரி:

  தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அம்பிகா (வயது30). இவர்களுக்கு சுமித்ரா (14) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுமித்ரா அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த  போது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மதிகோன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  திண்டிவனம்:

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 27). இவர் சென்னையில் கைப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வந்தார்.

  அப்போது பொன்னம் பூண்டி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

  இந்த நிலையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை ரகுநாதன் ஏமாற்றி தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

  இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறி அழுதார். அதனை தொடர்ந்து அவர்கள் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுநாதனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  பின்னர் கைதான ரகுநாதனை விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ரகுநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செய்யாறு அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

  செய்யாறு:

  செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மூர்த்தி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  இது குறித்து அறிந்த மாணவின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் மூர்த்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

  இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

  வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.

  இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

  இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமானார்கள். அவர்கள் கடத்தப்படார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராஜபாளையம்:

  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 16), முத்துக்குமார்(16) மற்றும் முகவூரை சேர்ந்த கார்த்திக் பெரியசாமி (16) ஆகியோர் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.

  நண்பர்களான 3 பேரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் வெளியே சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர்.

  நீண்ட நேரமாகியும் கருப்பசாமி, முத்துக்குமார், கார்த்திக் பெரியசாமி ஆகியோர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள், தங்களது மகன்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பலனில்லை.

  இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்கள் தாங்களாகவே எங்கேனும் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை:

  மதுரை கள்ளந்திரி அருகிலுள்ள தொப்புளாம் பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

  இந்த நிலையில் அவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

  இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது தொடர்பாக பிரியதர்ஷினியின் தாயார் மீனா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

  இதேபோல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வி.நடுவூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டுப்பட்டியில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டு இருந்தார்.

  அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் சுந்தர்ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இது தொடர்பாக சுந்தர்ராஜ் மகன் சுந்தர பாண்டி விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அய்யணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
  ஊத்தங்கரை:

  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிர். இவரது மகள் முபினா (வயது16). இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி முபினா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் முனிர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் முபினாவை தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

  இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை முனிர், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனது மகள் முபினாவை கடத்தி சென்றிருக்கலாம் என்று மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவி முபினா மற்றும் சிலம்பரசனை தேடி வந்தனர். அப்போது சிலம்பரசன் முபினாவை கடத்தி சென்று ராயக்கோட்டை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரியவந்தது. போலீசார் முபினாவை மீட்டு சிலம்பரசனை கைது செய்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் நிவேதா (வயது 15). இவர், கண்ணமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த மாணவி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி படுத்துக் கொண்டார்.

  இன்று காலையில் அவரது அண்ணன் பள்ளிக்கு சென்று மாணவியை சமரசம் செய்து கீழே இறங்குமாறு வற்புறுத்தினார். அடம்பிடித்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து கீழே குதித்தார்.

  இதில் இடுப்பு முறிவு ஏற்பட்டு மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோபி அருகே பள்ளி சென்ற பிளஸ்-1 மாணவி மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  கோபி:

  கோபி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் மினிசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 15). கவுந்தப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிள்ஸ்-1 படித்து வந்தார்.

  கடந்த 15-ந் தேதி மாணவி ஆனந்தி பள்ளிக்கு சென்றார். ஆனால் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து தந்தை மினிசாமி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  புகாரில் ‘‘என் மகளை எனது உறவினரான மாதேஸ்வரன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து என் மகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

  இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் இது பற்றி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி ஆனந்தியை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த டீக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

  கோவை:

  கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் - தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாய் தனியாக பிரிந்து சென்று வேடப்பட்டி நாகராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவருடன் மாணவி தங்கி உள்ளார்.

  சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்த போது வெங்கிடாபுரத்தை சேர்ந்த கோவை ரெயில் நிலையத்தில் ஆவின் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் மாணவியை அழைத்து சென்று பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

  இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  மயிலாடுதுறை:

  நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 20). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

  இந்த நிலையில் பிரவீன் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

  இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டனர். மேலும் மாணவியை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்த சம்பவம் மயிலாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print