என் மலர்
நீங்கள் தேடியது "arrested young men"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.
இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சரண்யா (வயது 25). சம்பவத்தன்று சரண்யா கடையில் இருந்தார். அப்போது பெரம்பலூர் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த ரவி (28) என்பவர் கடைக்கு வந்துள்ளார். அவர் சரண்யாவிடம் தகாத முறையில் பேசி கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து சரண்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
சுரண்டை:
புளியங்குடி முத்துராமலிங்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (எ) முஸ்தபா இவர் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சுரண்டையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது புளியங்குடி, சொக்கம்பட்டி, திசையன்விளை, வீ.கே புதூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷில்பா, முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சுரண்டை போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.