search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

    சென்னை:

    கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 620 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

    ஆனால் இடைவிடாது பெய்த கனமழையால் சுரங்கப் பாதை, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்களை இயக்க முடியவில்லை.

    450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து டெப்போகளிலும் பஸ்களை எடுக்க முடியவில்லை.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வர முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.

    பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறைவான அளவில் இயக்கப்பட்ட பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).

    இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது
    • மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற மாணவி மாலையில் தக்கலை வழியாக மண்டைக்காடு செல்லும் அரசு பஸ்ஸில் முன் பக்கத்தில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை பார்த்து அரசு பஸ் டிரைவர் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது.

    இது குறித்து மாணவியின் தந்தை திங்கள்சந்தை டெப்போ மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.

    • சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரும்போது இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் இந்த முறை தி.மு.க. அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

    சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள்.

    இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்கு வரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு அரசு பஸ்களை நம்பி இருக்கும் 89 சதவீத பெண்களில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    அதில் 42 சதவீதம் பெண்கள் பஸ் பயணத்தின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும் போது பஸ்சில் ஏறும் போதும், பஸ் நிறுத்தங்க ளில் பஸ்சுக்காக காத்தி ருக்கும் போதும் இந்த மாதிரி பாலியல் ரீதியி லான தொந்த ரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

    384 பெண்கள் பாலியல் தொந்தர வுகளை பஸ் பயணத்தின் போது சந்தித்திருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் 62 சதவீதம் பேர் துணிச்ச லாக தட்டி கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.

    ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62 சதவீத பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே காவலன் செயலியை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவுவதற்கான பெண்கள் போலீஸ் ரோந்து வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள்.


    29 சதவீத பெண்கள் மாநகர பஸ்களில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா கூறும் போது, பஸ் பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும் அடிக்கடி பஸ்களை இயக்க வேண்டும் பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பஸ்களில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள் என்றார்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கூறும்போது, நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கவுன்சிலிங்களும் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

    • லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
    • இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    வல்லம்:

    புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் திருக்கானூர்பட்டி அருகே வல்லம் - ஒரத்தநாடு 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

    அதே போல் லாரி மீது மோதிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    இதில் அரசு பஸ் டிரைவர் வினோதன், கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த விப த்தால் அந்த பகுதியில் போக்கு வ ரத்து பாதிக்க ப்பட்டது.

    • மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.
    • மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலை வாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவ தற்கும் சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.பஸ்கள் இயக்க வேண்டும் என்று அரசிற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சார்ந்த மலைவாழ் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணனிடம் பஸ் வசதி வேண்டும், ஏற்காடு மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.

    அவர்களது நியாயமான கோரிக்கையை தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடமும், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

    இதையடுத்து மலை கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மாவட்ட கலெக்டர், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக்கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    இதையடுத்து முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங்களை ஏற்காடு மலையோடு இணைக்கும் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தற்போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    அதன்படி இந்த மலைவாழ் மக்கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பஸ் இயக்கம் போதகாடு பகுதியில் இருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    இன்று காலை பஸ்சின் முதல் ஓட்டத்தை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பஸ்சிற்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கிராம மக்கள் வரவேற்றனர். மலை கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுவது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

    எங்கள் கிராமப் பகுதிக்கு நீண்டகால கோரிக்கையாக இருந்த பஸ் வசதி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

    இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி கல்லூரிக்கு சென்று வருவர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம்.

    இதற்கு முழு முயற்சி எடுத்த ஓன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    மேலும் கிராம மக்கள், எங்களுக்கு ஏற்காடு மலை கிராமங்களை இணைக்கும் தார் சாலை அமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர்.

    • பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.

    தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நேரம் தொடர்பான பிரச்சினை: துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து கீரம்பூர் மார்க்கத்தில் 2 தனியார் மினி பஸ்கள் 10 நிமிட இடைவெளியில் புறப்பட்டு செல்கிறது. இந்த 2 பஸ்களுக்கிடையே நேரம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்படுவதும், பின்னர் இரு தரப்பினரும் மாறி,மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சமரசமாக செல்வதும் வழக்கம்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் இந்த இரு பஸ்களுக்கு இடையே நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மினி பஸ் டிரைவர் பஸ்சினை துறையூர் - திருச்சி பிரதான சாலையில் எதிர் திசையில் நிறுத்தினார். பின்னர் 2 டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதித்தடு. பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்றன. சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துறையூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில்,புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் போக்குவரத்து போலீசார் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் நகரப் பகுதிகளில் சரக்குகளை இறக்க வரும் வாகனங்களை கண்டுகொள்ளாததாலும், கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

    மேலும் துறையூர் பகுதியில் இயங்கும் ஒரு சில தனியார் மினி பஸ்கள் உரிய வழித்தடங்களில் இயங்காமல், அவர்களுடைய இஷ்டத்திற்கு தகுந்தற்போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு,விபத்தும் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆகவே இனி வரும் காலங்களில் துறையூர் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துறையூர் பகுதியில் அனுமதி பெறாமலும் மற்றும் அனுமதி பெற்று உரிய வழித்தடங்களில் இயங்காத மினி பஸ்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும்.
    • பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார். கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும், இனி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையின் மூலமாக பேருந்தின் உள்ளேயும், பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    இது தவிர, வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.

    • தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என அறிவிப்பு
    • புலிகள் காப்பக துணை களஇயக்குநா் வித்யா போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவர தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுக்குழு சாா்பில் புதிய பஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் வனச்சரக ஊழியர்கள், பழங்குடி மக்கள், கூடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    பழங்குடி மாணவா்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்ப வசதியாக,தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை மேற்கண்ட பஸ் தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பொது மேலாளரிடம் கோரிக்கை மனு
    • கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் மாநக ராட்சி 50-வது வார்டுக் குட்பட்ட பொட்டல் விளை, வண்டிகுடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முகிலன் விளை, என்.ஜி.ஓ.காலனி வழியாக நாகர்கோவிலுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் பணிபுரிபவர்க ளுக்கும் செல்வதற்கு சிரம மாக இருந்து வருகின்றனர்.

    இதற்கு முன் இந்த வழித்தடத்தில் 37 ஏ நாகர்கோவிலில் இருந்து பேருந்து இந்த வழித்தடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க.பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான் டி.அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர் நிறுத்தப்பட்ட அந்த பேருந்தை மீண்டும் இயக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியிடம் நேரில் சென்று வலியுறுத்தினார். உடனடியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்ட பொது மேலாளரை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான்.டி.அய்யப்பனும் சேர்ந்து நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்கள்.

    ×