பஸ் மோதியதில் தலை நசுங்கி பெயிண்டர் பலி

வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ் மோதியதில் தலை நசுங்கி பெயிண்டர் பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).

இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.

இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com