search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்கள் இயக்கம்"

    • கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (3-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
    • மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்ட லத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    150 சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (3-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.
    • மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே போதக்காடு, மாரியம்மன் கோவிலூர், கரியதாதனூர், முல்லைநகர் என 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாய பெருங்குடி மக்களும், மலை வாழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கள் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களையும், மருத்துவமனை, அரசின் உதவிகளுக்கும், பள்ளி, கல்லூரி சென்று வருவ தற்கும் சுதந்திரம் அடைந்து கடந்த 75 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.பஸ்கள் இயக்க வேண்டும் என்று அரசிற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சார்ந்த மலைவாழ் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ். சரவணனிடம் பஸ் வசதி வேண்டும், ஏற்காடு மலை கிராமங்களை இணைப்பதற்கு தார் சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.

    அவர்களது நியாயமான கோரிக்கையை தர்மபுரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரிடமும், மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

    இதையடுத்து மலை கிராமங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட தருமபுரி மாவட்ட கலெக்டர், மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கிராம மக்களின் தேவைகளை குறித்து அறிக்கையாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    இதையடுத்து முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவு மலை கிராமங்களை ஏற்காடு மலையோடு இணைக்கும் புதிய தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தற்போது இந்த மலை கிராமங்களுக்கு புதிய பஸ் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது,

    அதன்படி இந்த மலைவாழ் மக்கள் வாழும் கிராம மக்கள் நகரப் பகுதிக்கு வந்து செல்வதற்காக முதல் பஸ் இயக்கம் போதகாடு பகுதியில் இருந்து பையர் நத்தம், பொம்மிடி, கடத்தூர் வழியாக தருமபுரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    இன்று காலை பஸ்சின் முதல் ஓட்டத்தை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    பஸ்சிற்கு ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் கிராம மக்கள் வரவேற்றனர். மலை கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுவது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

    எங்கள் கிராமப் பகுதிக்கு நீண்டகால கோரிக்கையாக இருந்த பஸ் வசதி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

    இதன் மூலமாக எங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பள்ளி கல்லூரிக்கு சென்று வருவர். நாங்களும் மிக எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் நகரப் பகுதிக்கு சென்று வருவோம்.

    இதற்கு முழு முயற்சி எடுத்த ஓன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    மேலும் கிராம மக்கள், எங்களுக்கு ஏற்காடு மலை கிராமங்களை இணைக்கும் தார் சாலை அமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளனர்.

    • போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.

    சேலம்:

    போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் தர்மபுரியில் இருந்து நாளை மாதேஸ்வர மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து சித்தர் கோவிலுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூர்- பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு தர்மபுரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும்,ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தர்ம புரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும், மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றார்.

    • பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.
    • அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    கோவை

    பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.

    இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-கோவை காந்திபுரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் பகுதிக்கும். சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்களும் இயக்கப்படுகிறது.

    உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பஸ்களும், சேலம் மற்றும் திருச்சிக்கு 50 பஸ்களும், தேனிக்கு 40 பஸ்களும் என 190 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை காந்திபுரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • கோவையில் இருந்து மதுரைக்கு 100 பஸ்களும், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பஸ்கள், தேனிக்கு 40பஸ்கள் என 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கோவை,

    பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.

    இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை காந்திபுரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்களும், கொடிசியா மைதானத்தில் இருந்து சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்களும், உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பஸ்களும், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பஸ்கள், தேனிக்கு 40பஸ்கள் என 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், கொடி சியா மைதானம், சிங்கா நல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திக்கு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து கீழவலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரியிடம் பேசி கீழவலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.

    அதன்படி கீழவலசை கிராமத்திற்கு முதன்முதலாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ் சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் இல்லாமல் திண்டாட்டம்
    • மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்துவதாக புகார்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம், திருத்தணி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் மது அருந்துவதாகவும் பொருட்களை சேதப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய கழிவறையில் கண்ணாடி உடைந்திருந்தது. அதை மாற்றவும் தெர்மல் கட்டிடத்தில் உள்ள கழிவறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை முதல் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.ஜி.எப், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், சித்தூர், திருப்பதி ஆகிய மார்க்கங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டு வந்ததால் வெறிச்சோடி கிடந்த புதிய பஸ் நிலையம் இன்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.

    புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் குடிநீர், டீ, காபி, பிஸ்கட், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆரணி, திருவண்ணாமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    ×