search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கார்த்திகை தீப திருவிழாவுக்கு திருவண்ணாமலை செல்ல வசதியாக 695 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • காரைக்குடி-ராமேசுவரத்தில் இருந்து செல்கிறது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணா மலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 26ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை )மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கி றது. இதையொட்டி நாளை 25-ந் தேதி முதல் 27 -ந் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் மூலம் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த சிறப்பு பஸ்கள் காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பஸ் நிலையங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாகவும் மினி பஸ்கள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×