search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம்

    • 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

    சென்னை:

    கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 620 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

    ஆனால் இடைவிடாது பெய்த கனமழையால் சுரங்கப் பாதை, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்களை இயக்க முடியவில்லை.

    450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து டெப்போகளிலும் பஸ்களை எடுக்க முடியவில்லை.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வர முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.

    பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறைவான அளவில் இயக்கப்பட்ட பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    Next Story
    ×