என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு
    X

    துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு

    நேரம் தொடர்பான பிரச்சினை: துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து கீரம்பூர் மார்க்கத்தில் 2 தனியார் மினி பஸ்கள் 10 நிமிட இடைவெளியில் புறப்பட்டு செல்கிறது. இந்த 2 பஸ்களுக்கிடையே நேரம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்படுவதும், பின்னர் இரு தரப்பினரும் மாறி,மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சமரசமாக செல்வதும் வழக்கம்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் இந்த இரு பஸ்களுக்கு இடையே நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மினி பஸ் டிரைவர் பஸ்சினை துறையூர் - திருச்சி பிரதான சாலையில் எதிர் திசையில் நிறுத்தினார். பின்னர் 2 டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதித்தடு. பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்றன. சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துறையூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில்,புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் போக்குவரத்து போலீசார் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் நகரப் பகுதிகளில் சரக்குகளை இறக்க வரும் வாகனங்களை கண்டுகொள்ளாததாலும், கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

    மேலும் துறையூர் பகுதியில் இயங்கும் ஒரு சில தனியார் மினி பஸ்கள் உரிய வழித்தடங்களில் இயங்காமல், அவர்களுடைய இஷ்டத்திற்கு தகுந்தற்போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு,விபத்தும் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆகவே இனி வரும் காலங்களில் துறையூர் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துறையூர் பகுதியில் அனுமதி பெறாமலும் மற்றும் அனுமதி பெற்று உரிய வழித்தடங்களில் இயங்காத மினி பஸ்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×