search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி"

    • பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கன்னியாபுரத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் குட்டி நாயர் (வயது 72). இவர் கீழவூர் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பொருட்கள் வாங்கு வதற்கு வந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை அந்த சிறுமி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சைல்டுலைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கிருஷ்ணன் குட்டி நாயரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.

    • மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார்.
    • சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாணவி தனது வீட்டை அடைந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார்.

    பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, மாணவி தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். மாணவியிடம் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தருவதாக கூறி இருக்கிறார்.

    ஆனால் கண்டக்டர் சில்லறை பாக்கியை தரவில்லை. இதனால் மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கண்டக்டர், மாணவியை திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.

    மேலும் பாக்கி சில்லறையை கொடுக்காமல், அந்த மாணவியை நடுவழியிலேயே பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க செய்தார். மாணவியிடம் வேறு பணம் இல்லாததால், வேறு பஸ்சில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அவர், கண்ணீர் வடிந்தபடியே தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

    சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தனது வீட்டை அடைந்தார். தன்னிடம் அரசு பஸ் கண்டக்டர் நடந்த விதம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போவுக்கு சென்று, மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டரை சந்தித்து தட்டிக்கேட்டார். அப்போது மாணவியின் தந்தையையும் அந்த கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    • தாய்மாமா மீது புகார் கூறிய அந்த மாணவி தனது தாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
    • மாணவியின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மஞ்சேஸ்வர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார்.

    தாய்மாமா மீது புகார் கூறிய அந்த மாணவி தனது தாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தந்தை பிரிந்து சென்றதால் தாய் பராமரிப்பில் மட்டும் இருந்து வந்த அந்த மாணவியின் வீட்டுக்கு தாய் வழி மாமாவான மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்கவர் வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், ஊருக்கு வரும்போது மாணவியின் வீட்டுக்கு மாமா என்ற முறையில் வந்திருக்கிறார். அவ்வாறு வரும்போது மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்திருக்கிறார். மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படித்தது வரை பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

    சிறுமி என்றும் பாராமல், 6 வயது முதல் 13 வயது வரை 9 ஆண்டுகளாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவியின் தாய்மாமன் மீது கற்பழிப்பு, ஆணாதிக்கம், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது, போக்சோ உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

    அதன்பேரில் மாணவியின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு காசர்கோடு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மாணவியின் தாய்மாமா மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    மாணவியின் தாய்மாமா மீது சுமத்தப்பட்ட 9 மோசமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு 2 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்த காசர்கோடு கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி மனோஜ், மாணவியின் தாய்மாமாவுக்கு மொத்தம் 97 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டது மட்டுமின்றி, அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
    • அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
    • ஷாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலணி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி.இவரது கணவர் கலிய பெருமாள்.இவர் கோயம்பு த்தூரில் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாலினி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலும் மகேஸ்வரி திருவாரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மகேஸ்வரி நகை கடைக்கு சென்று விட ஷாலினி தனது பள்ளிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஷாலினி மின்விசிறியில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முதற்கட்டமாக ஷாலினி அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதுகுறித்து மகேஸ்வரி கண்டித்த காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • மானாமதுரை பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
    • பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் மாணவி லலிணா சென்னை ஆலந்துார் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெற்றது.

    தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023-க்கான இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். 

    இவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜு, பூபாலன், கலைச்செல்வி கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் மற்றும் பெற்றோர் ரவீந்திரன் பாலபிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.

    • வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணையில் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே தாறா விளை திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வகுமார்.

    இவர் கேரளாவில் மரக் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தெர்ஷா மோள் (வயது 16 )தெர்ஷா மோள் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி கூடம் சென்று விட்டு வீட்டுக்கு தாமதமாக வருவார். இதனால் பல முறை தாயார் பிரேமா கண்டித்துள்ளார்.

    இது போல நேற்றும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்து தாயார் கண்டித்தார். உடனே ஆவேசமாக தெர்ஷா மோள் வீட்டின் மேல்மாடிக்கு சென்று கதவை பூட்டியுள்ளார்.வெகுநேரமாகியும் கீழே வராததால் தாய் பிரேமா மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு பார்த்த போது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் தெர்ஷா மோள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர் தெர்ஷா மோள்பரி சோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக தந்தை மரிய செல்வகுமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் தினமும் நண்பர்கள்களுடன் ஊர் சுற்றுவதால் தாய் கண்டித்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார். என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
    • பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது,

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவகுமார் . இவரது மகள் சத்யா(வயது 17). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், சத்யா தனியார் பள்ளியில் படிக்க விரும்பாமல் தோழிகளுடன் சேர்ந்து அரசு பள்ளியில் படிக்க விருப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று சத்யா பள்ளிக்குச் செல்லவில்லை.

    இதனால் பெற்றோர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சத்யா வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,

    கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.

    இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

    இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

    பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசிரியர்-பள்ளி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள திருவேங்கடபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது50). இவரது 17 வயது மகன் 12ம் வகுப்பு செல்கிறார். அதற்காக சிறப்பு வகுப்பு களுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    சில நாட்களாக வகுப்புக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து வகுப்புக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் சீனிவாசனும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மகன் வீட்டில் இல்லை. நண்பர்க ளிடம் விசாரித்தபோது வேறு நபருடன் ராஜ பாளையத்திற்கு சென்றதாக கூறினர். ஆனால் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகேயுள்ள தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகள் பிளஸ்-2 படிக்கிறார். அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை ஜெயலட்சுமி கண்டித்தார். இந்த நிலையில் இரவு தூங்கிக்கொண்டிருந்த மாணவியை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை.

    எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தறுமாறு ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகேயுள்ள சிப்பிபாறையை சேர்ந்தவர் வெங்கடசாமி(63). இவர் அங்குள்ள தோட்டத்து பங்களா ஒன்றில் தங்கி யிருந்தார். இந்தநிலையில் திடீரென்று மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி முத்துலட்சுமி(38), நர்சிங் கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இந்தநிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மரிய லியோஜன். இவரது மனைவி ரமணி(27). இவர் கணவருக்கு தெரியா மல் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாக ெதரிகிறது. இது தெரியவந்ததும் கணவர் கண்டித்தார்.

    இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவாளவாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 53). தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் தான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அருகில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவர் மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அதில் மாரிமுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறி கதறி அழுது உள்ளார். இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.மேலும் இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியதில் கிணற்றில் வைஷ்ணவியின் உடலை கண்டுபிடித்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×