search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்"

    • நீர் பாசன சங்க தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
    • மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 58 பாசன குளங்கள் உள்ளது. இதனை நிர்வாக வசதிக்காக 16 பாசன சங்கங்களாக வைத்துள்ளனர். இந்த நீர்பாசன சங்கத்திற்கு அரசு தேர்தலை அறிவித்தது அதன்படி 15 பாசன சங்கங்களுக்கு போட்டியின்றி தலைவர் மற்றும் மண்டலக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

    • மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.
    • 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 1135 கன அடியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டது. ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    நடப்பு ஆண்டில் தென் மேற்கு பருவ மழை காலத்தில் ஜூலை 15-ந்தேதி அமராவதி அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை துவங்கி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் தலையாறு, மூணாறு, மறையூர், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதி மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்குப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது அணைக்கு நீர்வரத்து ஆறுகளான, பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் பிற ஓடைகளின் மூலம் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது . இதனால் கடந்த 7 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 88 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சி யில் 3.80 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1135 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

    பருவ மழை காலங்களில் அணையின் மொத்த நீர்மட்டத்தில் 85 அடியை எட்டியதும் வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிறு அன்று மாலை அணை நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்ததும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது .தற்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக வாய்க்காலில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    வெடிகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

    தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், வெங்கடேசன், ஆகாஷ் கண்ணன், நிரஞ்சன், விமல் ராஜ், வினோத் ஆகியோர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • நாமகிரிபேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீரை குடித்த 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்ற பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது பிலிப்பாக்குட்டை கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் 100-க்கும் ஏற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்காக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்துதான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்தத் தண்ணீர் ஒருவித வாசனையுடன் வந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.

    இந்த தண்ணீரை 10-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியதாக தெரிகிறது. தண்ணீரை குடித்த பழனிச்சாமி (வயது50), வெள்ளையம்மாள் (60), விஜயா(47) உள்பட 10 பேர் வாந்தி எடுத்தனர். உடனடியாக அவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் 9 பேர் வீடு திரும்பினர்.

    நேற்று நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயா சங்கர் தலைமையில் சமத்துவபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். ஒருவித வாசனையுடன் வந்த தண்ணீர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கார்கூடல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    வாழப்பாடி:

    அயோத்தியாப்பட்டணம் வட்டார தோட்டக்கலைத்து றை உதவி இயக்குநர். கலை வாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களில் பயன் பெறுவதற்கு, உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்ப டையில் திட்டங்களை விவசாயிகள் இதுவரை பெற்று வந்தனர்.

    சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மட்டுமே இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டு 2022--–23 நிதியாண்டில் அனைத்து விவசாயிகளும் இணைய தளத்தில் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால் மட்டுமே மானியம் பெற இயலும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    எனவே, அயோத்தி யாப்பட்டணம் வட்டாரத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்தி தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் அரசு மானியங்களை பெற விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்.இதுமட்டுமின்றி, தேசிய தோட்க்கலை இயக்க திட்டத்தின் மூலம், வீரிய காய்கறிகள் பரப்பு விரிவாக்கத்தில், ஆடிப்பட்ட த்தில் நடுவதற்கு தக்காளி, கத்திரி, மிளகாய் நாற்றுகளை இணையத்தில் பதிவு செய்து விவசாயிகள் பெற்றுக் கொள்ள லாம்.

    நடப்பாண்டில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுப்பூர், மின்னாம்பள்ளி, வளையக்காரனுார், கருமாபுரம், விளாம்பட்டி, பூவனுார், கோராத்துப்பட்டி, எஸ்.என்.மங்கலம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தோட்டக்கலைத்துறை திட்டங்களை 80 சதவீதம் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    நுண்ணீர் பாசனம், காய்கறிகள் மற்றும் பழச்செடிகள் பரப்பு அதிகரித்தல், துல்லியப் பண்ணையம், வாழை மற்றும் காய்கறி ஊடுபயிர்கள், தென்னையில் ஊடுபயிர், அங்கக வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் செயல்ப டுத்தப்படுகிறது.

    தோட்டக்கலை பயிர்களில் பூச்சிநோய் தாக்குதல், மகசூல் இழப்பு மற்றும் பயிர் சேதாரம் உள்ளிட்ட விபரங்களை தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மூலமாக அல்லது வேளாண்மை விரிவாக்க மையம்–தோட்டக்கலைத்துறை அலுவலகத்திலோ தகவல் தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கருமாண்டிசெல்லிபாளையம் சித்தன்பட்டி குளம் நீர் வழிப்பாதைகளை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    பெருந்துறை:

    கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி காஞ்சிகோயில் சாலையில் சித்தன் பட்டி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு சீலம்பட்டி, எல்லப்பாளையம், ஒண்டிப்புலியங்காடு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் இருந்து மழை நீர் வடிந்து குளத்திற்கு வருமாறு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு கடந்த 3 முறை பெய்த மழை நீர் வீணாகி போனது. இது குறித்து பொதுமக்கள் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் வழி பாதைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம். பழனிசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே. செல்வராஜ், பெருந்துறை பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், வார்டு செயலாளர் ராஜா, கே.பி.எஸ். மோகன் குமார்,

    என்.எஸ்.கே. சக்திவேல், எஸ்.ஆர். வி.சாமிநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபால், ரகு, எல்லப்பாளையம் நடராஜ்,

    காலனி துரை, டீக்கடைத்துரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் பொதுமக்களும் உடன் இருந்தனர்.

    • ர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    அரவேணு

    கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான முக்கிய குடிநீர் ஆதாரமான தடுப்பணை, நீர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பேரூராட்சி இயக்குனர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியினை செய்து வருகின்றனர்.


    கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் சுத்தப்படுத்துதல் ஆங்காங்கே மரம் நடுதல் மண் சரிவு மற்றும் மலை மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    • 200 ஏக்கர் வயல்களுக்குள் கொள்ளிடம் தண்ணீர் புகுந்தது
    • மதகு சீரமைக்கப்படாததால் ஏற்பட்டது

    அரியலூர்:

    காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரண மாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி அருகே கருப்பூரில் கொள்ளி டம் ஆற்றில் உள்ள 7-ம் கண் மதகில் சேதமநை்துள்ள நீ தேக்கும் கதவுகள் சரியாக சீரமைக்கப்படாததால் ஆற்றுநீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்க ளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக கோடாலி கருப்பூர் கிராமத்தில் 150 ஏக்கர் பகுதி வயல்கள், 50 ஏக்கர் குறுவை சாகுபடி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதநை்துள்ளனர்.

    கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திற க்கப்பட வுள்ளது தெரிந்திரு ந்தும் அதிகாரிகள் 7-ம் கண் மதகை முன்கூட்டியே சீரமைக்கா மல் மெத்த னமாக இருந்ததே தற்போது பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்த அனைத்து பயிர்களையும் கணக்கெடுத்து உரிய இழ ப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    • நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது.
    • குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது.

    உடுமலை :

    தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மழை திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் மீண்டும் நிறைவதற்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் பயன்படும். உள்ளாட்சிகளின் குடிநீர் வினியோகத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாத நிலையையும் பாசன நீராதாரத்திற்கு குறையில்லாத சூழலையும் உருவாக்கும்.

    ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை சராசரியைக் காட்டிலும் மாவட்டத்தில் அதிக அளவில் பெய்துள்ளது. இதனால்கடந்த கோடைக்காலத்தை குடிநீர்த்தட்டுப்பாடு இன்றி கடக்க முடிந்தது. நொய்யல் நீராதாரத்தை அடிப்படையாக கொண்ட குளங்களில், இன்னும் நீர் நிரம்பியிருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள பல்வேறு குளம், குட்டைகள், மழை காரணமாக, நீர் நிரம்பியிருந்தது. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டதும், நீர் சேமிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாக அமைந்தது. சமீப காலமாக மாவட்டத்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள், அரசுடன் இணைந்து நீர்நிலைப்பராமரிப்பில் அக்கறை காட்டி வருகிறது. சிறிய மாற்றம் என்றாலும்கூட, அது பெரிய பயனை அளித்திருக்கிறது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதும் திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக பயன்களை அளிக்கிறது.குறிப்பாக, பில்லூர், பி.ஏ.பி., அணைகள் நிறைந்தால் திருப்பூர் மாவட்டத்திற்குத் தடையற்ற குடிநீர் ஆதாரத்துக்கும், பாசன நீராதாரத்திற்கும் வழிவகுக்கிறது.

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும். பவானியாற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.பி.ஏ.பி., திட்ட முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் பரம்பிக்குளம்அணைக்கு திறந்து விடப்படுகிறது. பரம்பிக்குளம், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.இது திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    மழைக்காலத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைநீர் சேமிப்பில் அக்கறை காட்ட வேண்டும். வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்புக்கான அமைப்புகளைச் செம்மைப்படுத்த வேண்டியது அவசியம். சிறுதுளி பெருவெள்ளம்என்பதை உணர்த்த வேண்டும். மழைநீரை வீணாக்காமல் பயன்படுத்துவது அவசியமானது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை.நிலத்தடி நீர் உயர்வதன் மூலம், பாசனத்திற்கும், குடிநீருக்கும், பிற உபயோகங்களுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.

    ×