என் மலர்
நீங்கள் தேடியது "Crackers"
- நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
திருப்பூர்:
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. நஞ்சராயன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள சாலை வழியாக இந்தப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி நூற்றுக்கணக்கான மனையிடங்களுடன் கடந்த 30 ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
4 பிரதான வீதிகளும் 12 குறுக்கு வீதிகளிலும் வீடுகள் அமைந்துள்ளன. இதன் அருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகள் பட்டாசு, வெடிகள் ஏற்படுத்தும் அதிக ஒலியால் அச்சமுறும். அதன் இயல்பு பாதிக்கப்படும் என்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தீபாவளியின்போது பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.
இந்த ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பறவைகள் நலன் கருதி பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். பறவைகளுக்காக எங்கள் சிறுவர்கள் இதை தியாகம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது.
- காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு.
சென்னை:
தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் சென்னை புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பகுதிகளில் பதிவான காற்றின் தரக்குறியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு பெருங்குடியில் 229 ஆக பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மணலியில் 175, மணலி நியூ டவுன், வேளச்சேரியில் தலா 152, அரும்பாக்கம் 146, ஆலந்தூர் 127, அம்பத்தூரில் 100 ஆக பதிவாகி உள்ளது.
அதிகமாக பட்டாசுகளை வெடித்ததால் ஆபத்தான நிலையில் காற்றின் தரக்குறியீடு உள்ளதால் காற்று மாசால் பெரும்பாலான மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
- சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!
பட்டாசு வெடிக்கும்போது...
* பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.
* காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
தீப்பற்றினால்...!
* பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.
* தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.
* தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!
* காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
* பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
* பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
* சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.
* பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.
- ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
- தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018-ம் ஆண்டிலிருந்து தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் பட்டாசும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறது.
- பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் பார்வையில் வெடித்து மகிழுங்கள்.
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்பு.
தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெற்றார் கிருஷ்ணர். இதற்கு பிறகு கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீட்டிற்கு செல்லும் போது அங்கு அவருக்கு வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது.
இதனால் தான், தீபாவளியன்று இனிப்பு மற்றும் பட்டாசு வெடித்து உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி, புது ஆடை உடுத்தி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வெடித்து மகிழ பட்டாசு வாங்குகிறீர்கள். ஒரு சில பேருக்கு பேன்சி வெடி பிடிக்கும். 200-க்கும் மேற்பட்ட பட்டாசுகள் ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பட்டாசுகள் ரெயில் மற்றும் பேருந்திலோ கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. ஆன்லைன் மூலம் (CRACKERSINDIA.COM) புக் செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் புக் செய்வதன் மூலம் பட்டாசும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து விடுகிறது. கிப்ட் பாஸ் கொடுப்பதன் மூலம் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடியும்.
பாதுகாப்புடன் எப்படி வெடிப்பது ?
பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் பார்வையில் வெடித்து மகிழுங்கள். ஒரு வாலி நீரை பக்கத்தில் வைத்த பின் பட்டாசு வெடிக்க தொடங்குங்கள். பிறகு வெடிக்கும் போது சற்று விலகி நின்றபடி கொளுத்துங்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். பட்டாசை சட்டை பையில் வைத்திருக்க கூடாது. வெடிகளை டின் பாட்டில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள். நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசு வெடிக்க செய்யுங்கள்.
சேமிப்பு
CrackersIndia.Com - ல் 85%ஆபர் உடன் குறைந்த பட்சம்
Rs. 2500/- வாங்கினால் போதும் இலவசமாக உங்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும். இதனால் நேரம் மற்றும் பணம் சேமிக்கப்படுகிறது.
Last date for Booking : 12.10.25

ORDER புக் பண்ணுங்க:
1. www.crackersindia.com இந்த வெப்சைட் ஓபன் பண்ணுங்க
2. பட்டாசுகளை தேர்வு செய்யுங்க........
3. உடனே ஆர்டர் பண்ணுங்க ........
4. 99621 22309, 93615 81928 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
- பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதேபோல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், துலுக்கன்குறிச்சி பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை தனித் தாசில்தார் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முன்னதாக துலுக்கன்குறிச்சியில் உள்ள மஞ்சுநாத் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலை கடந்த 2020-ல் பட்டாசு வெடி விபத்து காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காமல் அந்த தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை மற்றும் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), மதன்குமார் (32), செந்தமிழ் வெற்றி பாண்டியன் (40), இளஞ்செழியன் (40), மணிகண்டன் (38), விஜயகுமார் (40), மஞ்சுநாத் குமார் (40) ஆகியோர் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து துலுக்கன் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டாசு தயாரித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள், சோல்சா வெடிகள், மேலும் முழுமையடையாத பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
- 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் ைகது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அன்பில்நகரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த தகர செட்டில் பாதுகாப்பின்றி சாக்குமூடைகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15 கிலோ இரண்டு சாக்கு மூடைகள், ஒரு 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கிவைத்திருந்த ராஜிவ்காந்தியை(38) ைகது செய்தனர்.
சிவகங்கை நகர் பஸ் நிலையத்தில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் போலீசார் பஸ்நிலையப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி விற்ற சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைப்பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரள லாட்டரிகள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
- படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
- பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
- குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.
அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
- உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
நீடாமங்கலம்:
கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






