என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி போனஸ்"
- பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
- சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!
பட்டாசு வெடிக்கும்போது...
* பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.
* காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
தீப்பற்றினால்...!
* பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.
* தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.
* தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!
* காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
* பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
* பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
* சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.
* பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.
- உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும்.
உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.
- வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
- மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும். அந்த இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.
வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும்.
நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் வரும் 20-ந்தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.
வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும்.
ஆனால், அக்டோபர் 20-ம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அது அடுத்த இரு நாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
- மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவு - கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
- ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.1.968.67 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
- நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.
தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.
தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.
- தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே எஸ்டேட் உரிமையாளர் தெரிந்து கொண்டார்.
- மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.
கோத்தகிரி:
தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனசாக வழங்குவது வழக்கம்.
சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புல்லட் மோட்டார் சைக்கிளை வழங்கி அசத்தியுள்ளார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தேயிலை எஸ்டேட் உரிமையாளர்.
கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அந்த பகுதியில் சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.
இவரது இந்த நிறுவனங்களில், 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுத்து அசத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது எஸ்டேட்டில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட், மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ஊழியர்களை திடீரென அழைத்த, எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார், உங்களுக்கான தீபாவளி பரிசு என சாவிகளை வழங்கியபோது, ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உரிமையாளர் சிவக்குமார், தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்டனர்.
அதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்பீல்டு கிளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.
பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளி பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார்.
இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.
இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறியதாவது:-
எங்கள் எஸ்டேட் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.
ஊழியர்களை கவுரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்கள் 15 பேருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
2022-2023-ம் ஆண்டு மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்மந்தமான பேச்சுவார்த்தையானது மங்கலம் ஊராட்சி-சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்க வளாகத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு போனஸ் பேச்சுவார்த்தையானது மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க நிர்வாகிகள் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளிடையே போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது
இந்த போனஸ் பேச்சுவார்த்தையின் இறுதியாக 2022-2023-ம் ஆண்டு (இந்த ஆண்டு) மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.16 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் மங்கலம் பகுதி விசைத்தறி உரிமையாளர் சங்கம் தரப்பில் மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால், மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் விஸ்வநாத் மற்றும் மங்கலம் பகுதி விசைத்தறி சங்க நிர்வாகிகளான வெங்கடாசலம்,முத்துகுமார், மனோகர் ஆகியோரும் மங்கலம் பகுதி விசைத்தறி தொழிற்சங்கம் தரப்பில் விசைத்தறி சம்மேளன மாநில தலைவர் முத்துசாமி, விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, அண்ணா தொழிற்சங்க திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சுப்பிரமணி , ஐ.என்.டி.யு.சி.திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம்.நடராஜ் ,சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகவும், குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்க ளின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாகவும் திகழ்கிறது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தி யாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030-ம் ஆண்டுக்குள் "1 டிரில்லியன் அமெரிக்க டாலர்" பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது.
தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21 ஆயிரம் என்பதைத் தளர்த்தி அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
லாபம் ஈட்டி உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.
இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400-ம் அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
- பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் சுமார் 400 டன் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும், விடிய விடிய போராட்டம் நீடித்தது.
இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து போராட்டம் 2-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பேச்சுவார்த்தைக்குச் சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்தபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.
- புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் கூட்டமாகக் காணப்படுகின்றன. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.
இதற்கிடையே, புதுச்சேரி அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.






